படம் பார்த்துக் கவிதை சொல்லுங்கள் - கவிதைப் போட்டி முடிவுகள்

*ஒரு போட்டியின் வெற்றி என்பது அந்தப் போட்டியில் , தோழர்கள் அனைவரும் முழு ஆர்வத்தோடு பங்கு கொள்வதே என்று முழுமையாக நம்புகிறேன் நான்*


நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்...


எந்த ஒரு நிகழ்வும் வெற்றிகரமாக நடந்து முடிவதற்கான ஆரம்பப்புள்ளி என்பது ஒரே ஒரு நொடியே...


அப்படி ஒரு நொடியில் சட்டென்று ஒரு நள்ளிரவில் தோன்றியது , 'படம் பார்த்து கவிதை சொல்லுமாறு ஒரு போட்டி நடத்துவோமா..' என்று... அப்படி உருவான ஒரு எண்ணம் இந்த நிமிடம் முழுமை அடைந்து விட்டது நண்பர்களே...


ஆம் நண்பர்களே....


படம் பார்த்துக் கவிதை சொல்லுங்கள்' போட்டி முடிவுகள் இப்போது என் கைகளில்...


இப்படி ஒரு நிகழ்வு நல்லபடியாக நடந்து முடிந்த பிரமிப்பு கொஞ்சமும் விலகாமல் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன் இப்போது...


இந்த இனிய வேளையில் பலருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன் நண்பர்களே...


அவர்களுள் முதன்மையாக இரண்டு பேருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்...


படம் - ஒரு போட்டியையே தாங்கி நிறுத்த வேண்டிய ஒரு இடத்தில் இருக்கப்போகும் படம் எனில் , ஒரு தவம் போலத் தேடி எடுக்க வேண்டும் அந்தப் படத்தை என்று அந்தச் செயலின் தீவிரம் உணர்ந்து தேடினேன் படங்களை.. மூன்று நாட்கள் தொடர் தேடலுக்குப் பிறகு 'WORLDS MOST FAMOUS PAINTINGS' என்ற பக்கத்தில் இருந்தே இந்தப் பெண்ணின் படத்தைக் கண்டறிந்தேன்...


இந்த நேரத்தில் , இன்று நம் இத்தனை பேருக்குக் கவிதையாகி இருக்கும் இந்தப் பெண்ணுக்கும் , இந்த ஓவியத்தை வரைந்த அந்த ஓவியருக்கும் என் நன்றிகள் பல...


நடுவர்கள்...


நடுவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்ல நினைக்கிறேன் நண்பர்களே - நடுவர்கள் நன்றிக்குரியவர்கள்...


ஆம் நண்பர்களே.. இந்தப் போட்டியினைத் தாங்கி நிறுத்தியது முழுக்க முழுக்க நடுவர்களே... 'இப்படி ஒரு போட்டி நம் தளத்தில் நடத்த விரும்புகிறேன் .. தாங்கள் நடுவராக செயல்புரிந்து கவிதைகளைத் தேர்வுகள் செய்து கொடுக்க வேண்டுகிறேன்' என்று நான் கேட்டுக் கொண்ட மறு நொடியே 'அவசியம் செய்து கொடுக்கிறோம்' என்று ஏற்றுக் கொண்டு , இத்தனை குறைவான நேரத்தில் இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தி வெற்றி பெற்ற கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்தார்கள்...


இத்தனை விரைவாக செயல்புரிந்து , முடிவு அறிவிப்பதாகக் குறிப்பிட்ட நாளுக்கும் முன்னதாகவே போட்டி முடிவுகளை வெளியிட்டு விட்ட நடுவர் குழுவிற்கு என் நன்றிகள் பல...


ஒரு போட்டியின் சுவாரசியம் , அந்தப் போட்டியின் நடுவர்கள் யாரென்று போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியாமல் இருப்பதில் தான் அடங்கி உள்ளது என்று நான் முழுமையாக நம்புகிறேன் நண்பர்களே... அதனால் , இந்தப் போட்டியில் நடுவர்களாக செயல் பட்டவர்கள் யாரென்பதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறேன்...


அடுத்ததாக ,


ஒரு போட்டியின் வெற்றி என்பது அந்தப் போட்டியில் , தோழர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கு கொள்வதே என்று நம்புகிறேன் நான்... சிறியவளான என் முயற்சிக்கு இத்தகைய பெரிய பேராதரவு கொடுத்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு செய்த போட்டியாளர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. உங்கள் பங்களிப்பு பெருமகிழ்ச்சி கொடுத்தது... உங்கள் அனைவரால் மட்டுமே இப்போது இந்த முயற்சி பெருவெற்றி அடைந்து இருக்கிறது...


இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றும் இந்தப் போட்டி இத்துணை சிறப்பாக நிறைவு பெற துணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு , போட்டி முடிவுகளைத் தற்போது அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நண்பர்களே...


பரிசு பெற்ற தோழர்கள் :


முதல் பரிசு - தோழர் ராஜமாணிக்கம் அவர்கள்

இரண்டாம் பரிசு - தோழர் சொ.சாந்தி

மூன்றாம் பரிசு - தோழர் நாகராணி மதனகோபால்



பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


மீண்டும் இது போன்று இன்னொரு இனிய சந்தர்ப்பத்தில் இணைவோம் நண்பர்களே...



நேசத்துடன்
கிருத்திகா தாஸ்

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (11-May-15, 11:10 pm)
பார்வை : 404

மேலே