இன்பங்கள் எல்லாம் அவளாலே

(ஜோதா அக்பர் ..தமிழ்..இப்படத்தின் .."முழுமதி அவளது முகமாகும்" என்ற பாடலின் சந்தம்)....

இன்பங்கள் எல்லாம் அவளாலே
இன்னுயிர் இருப்பதும் அவளாலே
சிறகுகள் முளைப்பதும் அவளாலே
சிந்தனை முழுவதும் அவள்தானே

காதல் தீயினை என்னுள் வளர்த்தவள் அவள்தானே
வாழ்வு என்பது எனக்கு என்றும் அவளாலே!
மனதை அவளிடம் பறி கொடுத்தேன்
உயிரையும் சேர்த்தே ஒப்படைத்தேன்
தனை முழுதாய் உடனே என்னிடம் தந்து விட்டாள்

ஓஹோ இதயத்தில் ….

ஆசைகளும் வேறில்லை ..அவளின்றி வாழ்வு இல்லை
அவள் தோட்டத்து மழையில் குளிக்கின்ற மரமென ஆகிவிட்டேன்
கேட்டதுமே கிடைக்காத தெள்ளமுதம் அவள்தானே
அதன் மகிமை இனிமை அனைத்தும் அறிந்தவன் நான்தானே!
ஒரு நிலவென அவள் குளிர .. அவளை தழுவிடும் முகில்நானே !
இடையினில் வெறுமை இருக்குது மெலிதாக
எரிமலையே வெடித்தாலும் கைகளினால் தடுப்பேனே
அவள் வதனம் சிறிதும் வாடிட பார்ப்பேனா..

ஓஹோ இதயத்தில் ….

அன்னமென அவள் வந்தாள்
அழகு நடையினையே நான் கண்டேன்
சிறு புன்னகை காட்டிட துள்ளிடும் என் நெஞ்சம்
விரல் நுனிகூட படுகையிலே மனதில் புயல் உருவாகி
கரை கடந்திட முடியா தவிப்பினில் நான் கிடந்தேன்
அன்புடன் தந்தாள் ஒரு முத்தம்
நெற்றிப் பொட்டினில் இதழ் வைத்து
நெஞ்சினில் சுரக்கும் காதலை கொண்டு சென்றாள்
அவள் பின்னாலே செல்கின்ற மன்னன் எனக்கு தோல்வியில்லை
..என்றும் தோல்வியில்லை !


ஓஹோ இதயத்தில் ….

எழுதியவர் : கருணா (13-May-15, 3:22 pm)
பார்வை : 264

மேலே