தெளிவும் பிறந்திடும் தெரியார்க்கும்

சட்டம் வளையுமா சாமானியர்க்கு, சமூகத்தில்
சறுக்கலோ நீதிக்கும் சமனின்றி - வழங்கிடும்
தீர்ப்பால் மாறுதோ திசைதவறிப் போகுதோ
நாடெனும் கப்பலும் நடுக்கடலில் !
விமர்சிக்க நானும் விரும்பவில்லை , எனினும்
விவரம றிந்திடவே விளம்பினேன் - வேறல்ல
வியத்தகு நிகழ்வுகள் விண்ணிலே நடந்திடும்
மண்ணிலும் மலருமா மாயைகள் !
வினவுவது தவறா விடைதேவை , நெஞ்சங்களே
சிந்தித்து நவில்வீர் சிந்தையுளோர் - பயனுறவே
படிப்பவரும் இதனை பார்வை யிடுவோரும்
தெளிவும் பிறந்திடும் தெரியார்க்கும் !
பழனி குமார்