காதல் வந்தவேளை…
தேன் சிந்தும்
மலராய் நீ இருக்க …
உனை சுற்றி தேனியாய்
என் விழிகள் …
ஒரு நொடியில் நீ.....
உன் விழிகள், இதயம்
செவ்விதழ் ஒன்றுபட
ஏதோ ஒரு தேடலுடன்
எனை நோக்கி புன்னகைக்க ….
நானோ தடுமாற்றத்தில் ….
என் விழிகள், இதயம்
இரண்டும் சொல் என்றது …
சுயேட்சையாய்
என் புத்தி மட்டும்
சற்று பொறு என்றது …
தேவதை நீ என்
இதயவாசல் வர
தேதி எதுவும்
குறிக்கின்றது போலும் …!!