அன்பால் விளைவது
![](https://eluthu.com/images/loading.gif)
கரிய காகம் கரைகையிலும்
குயிலின் கீதம் கேட்டேன் நான்!
சூரிய ஒளிக்கதிர் படும் போதும்
சந்திரன் தண்மை பெற்றேன் நான்!
கூரிய மு்ள்ளைத் தொடும் போதும்
மலரின் மென்மை உணர்ந்தேன் நான்!
பரிவுடன் அன்பை தந்தாய் நீ
தலைகீழ் உலகம் கண்டேன் நான்!