நீ ஒரு மாயை
![](https://eluthu.com/images/loading.gif)
அழகே!
நீ எங்கிருக்கிறாய்,
உன் முகவரிதான் என்ன...
உன்னால்தான் நேசம் பிறக்கிறது!
உனக்காகத்தான் பல
இதயங்கள் துடிக்கின்றது!
அழகே
நீ பூக்களில் இருக்கிறாய் என்றால்
அவை தன முகம் பார்பதில்லை!
நீ கவிஞனின் பாக்களில் இருக்கிறாய் என்றால்
அவை தனக்கு மகுடம் சூடி கொள்வதில்லை!
நீ வண்ணத்து பூச்சியின் இறகினில் இருக்கிறாய் என்றால்
அவை நெடு நாள் வாழ்வதில்லை !
அழகே
நீ ஒரு மாயை,
மனிதன் மட்டுமே உனக்காக மண்டியிடுகின்றான்.........
காரணம் - அவன்
உன்னால் ஒரு உணர்வினை பெறுகிறான்....
எனவே
அழகே உன்னை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,
ஆனால்
உன் முகவரி தெரிந்துவிட்டது
ஆம் - மனிதனின் உணர்வில் நீ வாழ்கின்றாய்!
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்