வழி தவறா பாவை - உதயா
![](https://eluthu.com/images/loading.gif)
நான் பூவாய் பிறவாமல் போயிருந்தால்
நாணமெனும் முட்கள் என்னுள்
முளைத்து வளர்ந்தும் இருக்காது
பலர் கனவினை கிழித்துமிருக்காது ...
கௌரவமெனும் போர்வையை எமையீன்றோர்
எம்மேல் திணித்தே வளர்த்ததால்
என்கண்கள் இரவில் மட்டுமே
விண்ணுக்கு ரசிகையானது
துள்ளியெழும் ஆசையனைத்தினையும்
துளிர்விடும்போதே கிள்ளி எரிந்தேன்
தத்தி தவழும் வயதிலிருந்தே
தமக்கையுடன் மட்டுமே நட்பு பூண்டேன்
சிறகுடன் பிறந்த கனவுகளனைத்தினையும்
தீயீக்கு இரையாக்கி கரியாக்கினேன்
பெண்மைக்கான பாணியில் மூழ்கியே
பதுமை குலத்திற்கு சான்றானேன்
சாலையோடு எம்பாதம் உறவாடும் நேரத்தில்
ஊலையிடும் நரிகளில் கூற்றுக்கும்
புறம் பாடும் நாய்களின் கேள்விக்கும்
என் செவி சாய்வதேயில்லை
காதல் வளம் செழிக்கும்
இளவட்ட தேசங்கள்
என்னை நெருங்கியபோது
பாலை நிலமாய் காட்சியளித்தேன்
இன்பம் பொங்கும் கடலிலும் நானோ
நஞ்செனும் போர்வையில் காட்சியளித்தேன்
சிடு மூஞ்சி, திமிரு பிடித்தவளென
இளைஞ்சர் அரங்கில் விருதும் பெற்றேன்
இருந்தும் நாளுக்கு நாள்
முல்லைகொடியான என்னுடலோ
பல காம நாய்களின் கண்களில்
நாறாகதான் கிழிகிறது
இறைவா ..!
நான் சான்றோர் அகத்திற்கு
நல் பாவையாகவிடினும்
எவ்வாண்மகனின் வாழ்விற்கும்
எமனாக கூடாது
உறவார் சொற்களில்
இராணியாகாவிடினும்
ஊரார் தூற்றலுக்கு
இரையாக கூடாது ..