என் ஒரு சொட்டு கண்ணீரின் கதை - உதயா

கல்லூரி தேர்வு முடிந்ததும்
இருபது நாட்களுக்கு விடுமுறைதான்
ஒரு நாள் வீட்டில் இருந்துவிட்டாலே
அம்மாவின் புலம்பல்கள் தொடர்ந்துவிடும்
ஆறுமாதகால கல்லூரி வாழ்க்கைக்குப்பின்
கட்டிட வேலைக்காக செல்கிறேன்
ஒன்பது மணிக்குள் வரவில்லையென்றால்
முதலாளியின் அக்னிப்பூ அர்ச்சனை தொடர்ந்துவிடும்
மண்வெட்டியை கையில் பிடித்து
வேலையை தொடங்கிய அரைமணி நேரத்திலே
கடலின் ஊற்றாய் மாறியிருக்கும்
என் தேகத்தின் அங்கமெல்லாம்
செங்கற்களை தலையில் சுமர்ந்து
படியினில் ஏறும் போது
தலையின் பாகமெல்லாம் பரிசாய்
வலியினை அளிக்க தொடரும்
நட்டநடு பகலிலே சூரியனின் வெயிலிலே
கருவாட்டின் நிலையை என்மேனியும் அடையும்
வேலையின் பளுவிலே பாதி குருதி
வியர்வையாய் மண்ணினை தொடும்
வேலை செய்யும் இடத்திற்கு எதிரே
தம் வயது இளைஞ்சர் பலரும்
பைக்கில் செல்லும் போது
என் இதயத்தில் இரத்தம் சொட்ட தொடங்கும்
மாலை நெருங்கியப்பின்னே வீடு திரும்ப
கை கால்களை கழுவியப்பின்னும்
சிமெண்ட் கலவையின் மாயங்களால்
மல்லிப் பூக்கள் அவ்விடத்தில் பூத்திருக்கும்
பேருந்தில் செல்லும் போது சகபயணிகளின்
அருவெறுப்பு பார்வைக்கு பயந்தே
நடபயணமாய் வருகிறேன் வீட்டிற்கு
எட்டு கிலொமீட்டரையும் கடந்து
வீட்டை நெருங்கும் போது கால்களின் எழும்போ
உடையும் நிலையை அடைந்திருக்கும்
உடலில் சக்தியெல்லாம் கரைந்து
சோர்வு மட்டுமே மீதியிருக்கும்
இரவினில் தூங்க செல்லும் போது
வலிகள் பாதி தூக்கத்தை பறித்தது
குடும்பத்தின் சூழ்நிலையை எண்ணியே
மீதி துக்கமும் பறிபோனது
வாரத்தின் ஆறு நாட்களும்
என் கண்ணீரிலே கரைந்து போகும்
வலியின் வேதனையிலே
என் நாட்களும் விடியும்
சம்பள நாளின் பணத்தினை வாங்கி
அம்மாவின் கையில் கொடுக்கும் போது
மலரும் அம்மாவின் புன்னகையிலே
என் வலிகளெல்லாம் மறையும்
விடுமுறை முடிந்து கல்லூரி சென்றபின்
சகமாணவர்களின் சுற்றுலா பயணங்கள்
உறவுகளின் ஊர் பயணங்கள்
பகிர்வாய் வகுப்பறையில் பரவும்
ஆனால் நானோ
என் நிலையை எண்ணி வருந்தி
என்னையே வெறுத்து கூனி குறுகி
பொய்யாய் சிரித்துக் கொண்டிருப்பேன்
தனிமையில் இருக்கும் போது
என் வாழ்கையை நினைத்து
என்ன கேவலமான வாழ்கை இதுயென என்று
என் ஒரு சொட்டு கண்ணீரின் கதை முடியும்