அது நீதானா

அவ நடுவகுடெடுத்து
வேப்பெண்ணை தேச்சு
வகுப்பில் முன் வரிசையில்
உட்காரும் பட்டாம் பூச்சி!!!

அவ கன்னக்குழி சிரிச்சு
காக்கா கடி கடிச்சு
என் பிஞ்சு நெஞ்சு முறிஞ்சு
ரெண்டு துண்டாச்சு!!!

அவ ரெட்டை சடை பின்னி
சவ்வு மிட்டாய்க்கு விம்மி
அழுதா அழுமூஞ்சி
சிரிச்சா அம்மாஞ்சி!!!

அது நான்,
பாடத்தை மறந்து
பார்த்து பார்த்து
ரசிச்ச முகம்
பாசாங்கு இல்லாம
என்னை பார்த்து சிரிச்ச முகம்!!

பத்து நிமிசத்துல
பத்தாம் வகுப்பு ஞாபகம்
பல்லை காட்டுதடி!

உன்ன
பப்புல பார்த்தபோது
நெஞ்சு பக்குன்னு பதறுதடி!!!

நீதானா?

அது நீதானா?

எழுதியவர் : ஜெயவர்மன் (15-May-15, 8:29 pm)
Tanglish : athu neethaanaa
பார்வை : 168

மேலே