நல்ல நண்பன்

நன்றி உள்ளவன் நண்பனே
தன்னை நம்பும் நண்பனுக்கு
தானே உயிராகி உடன் பிறப்பாகி
அன்னையாகி அனைத்தும் அவனாகும்
ஒரே ஜீவன் உற்ற நண்பனே
உயிர் கொடுக்கவும் தயங்காதவன்
உண்மைத் தோழனே
எந்த உறவும் எதிர்பார்ப்பின்றி வருவதில்லை
ஆனால் நண்பன் மட்டுமே நட்பை நம்பி
நம் பின்னே தொடர்பவன்
உண்மை நட்பு உடன் இருக்கும்
நம் நிழல் அவனாவான்
அன்னையைப் போல் நண்பனும் உண்டு
நண்பனைப் போல் எவருமே இல்லை
உலகில் மேலான செல்வம் நல்ல நட்பு
நல்ல நண்பன் உடையவன் அனைத்தும் உள்ளவனே
நண்பன் உள்ளான் எதற்கும் அஞ்சான்
நட்பு போற்றப் பட வேண்டியது
நண்பன் உள்ளவன் கொடுத்து வைத்தவன்

எழுதியவர் : பாத்திமா மலர் (16-May-15, 9:41 pm)
Tanglish : nalla nanban
பார்வை : 2051

மேலே