முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால்!
எம்மாவீரர்களே
மன்னித்து விடுங்கள்!
இப்போதைக்கு என்னால்
கண்ணீரஞ்சலி செலுத்தமுடியாது!
எரிந்துகொண்டிருக்கும் என்
தாயக கனவை கண்ணீர்கொண்டு
அணைத்திட விருப்பமில்லை!
உங்கள் கருவிகளும் கனவுகளும்
இனி எங்கள் தோளில்!
கட்டாயம் வருவேன் ஓர்நாள்
உங்கள் காலடிக்கு
அன்று தாயகவிடுதலையை
நெஞ்சிலும்
எதிரியின் தலையை கையிலும்
சுமந்து வருவேன் உங்கள் காலடிக்கு!

எழுதியவர் : காமராசன் மண்டகொளத்தூர் (17-May-15, 8:07 am)
Tanglish : mullivaaikkaal
பார்வை : 132

மேலே