நாகாமராசன் மண்டகொளத்தூர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாகாமராசன் மண்டகொளத்தூர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  07-Jun-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Apr-2015
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  15

என்னைப் பற்றி...

மானுடம் செழிக்க மக்கள் மொழியில் போராடும் பாமரன் நான்!

என் படைப்புகள்
நாகாமராசன் மண்டகொளத்தூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால்!
எம்மாவீரர்களே
மன்னித்து விடுங்கள்!
இப்போதைக்கு என்னால்
கண்ணீரஞ்சலி செலுத்தமுடியாது!
எரிந்துகொண்டிருக்கும் என்
தாயக கனவை கண்ணீர்கொண்டு
அணைத்திட விருப்பமில்லை!
உங்கள் கருவிகளும் கனவுகளும்
இனி எங்கள் தோளில்!
கட்டாயம் வருவேன் ஓர்நாள்
உங்கள் காலடிக்கு
அன்று தாயகவிடுதலையை
நெஞ்சிலும்
எதிரியின் தலையை கையிலும்
சுமந்து வருவேன் உங்கள் காலடிக்கு!

மேலும்

ஆத்தங்கரை தாண்டி
நாத்துநட போனஆத்தா
அந்தி சாய்ஞ்சிருச்சி
ஆள இன்னும் காணலியே!
நீ சுள்ளிபொறுக்கிவந்து
சுடுகஞ்சி காய்ச்சிதந்து
சுகமா நா கண்ணுறங்க
சோகத்தாலாட்ட பாட்டில்வச்ச!
பள்ளிக்கூடம் போறபுள்ள
பளபளன்னு போகனும்னு
பாதிராவு ஆனாலும்
ஒத்த சட்ட தொவச்சி வைப்ப
அந்திசாம பொழுதுவர
சலிக்காம நீ ஒழப்ப
அலுப்பு தீர தூங்கிடாம
அவசரமா எழுந்துருப்ப!
வெடவெடக்கும் குளுருல நா
ஒடுங்கி சுருண்டு படுத்துருப்பேன்
நா கண்விழிச்சி முழிச்சிடாம
உன் பொத்தல் சேல போத்தி வைப்ப!
ஜானமூட்டு கொட்டாயில
சாணிய நீ எடுத்துவந்து
வாசலிலே நீர்தெளிச்சி
வைகறையை எழுப்பிடுவே!
கரிபடிஞ்ச பானையில
கூழும் நீ கரச்சி வைப்ப
காரணம

மேலும்

மகனே!
கொஞ்சம் நேரம்
சும்மா இருடா!
பாவம் நீ சிரிக்கும்போதெல்லாம்
வாடிவிடுகிறது
நம் தோட்டத்து பூக்கள்!

மேலும்

ஆடிவெள்ளினா அரைநாள்தான்
பள்ளிக்கூடம்!
அம்மன்கோவில் பொங்கல்வைக்க
அம்மாக்கூட கெளம்பிடுவோம்!
ஊரத்தாண்டி ஒருமைலு
ஒத்தயில அம்மன்கோவில்
ஓடையில சுள்ளிப்பொருக்கி
ஓடிவந்து பொங்கவைப்போம்!
ஓடக்கர ஓரத்துல நாவப்பழம்
செவந்து தொங்கும்!
அம்மா குரல் ஒலிக்கும்வரை
நாவப்பழம் பொறுக்கித்திம்போம்!
பொங்கப்ப்பானை வரிசையில
கூடத்துல நின்னுருப்போம்
கருவறைத் தீண்டாம
கன்னத்துல போட்டுக்குவோம்!
பச்சைவயல் கரும்பெல்லாம்
பக்கத்துல இருந்தாலும்
அய்யனாரு மொரட்டுமீசை
நெனப்பு வந்து கண்ணகுத்தும்!
பத்துமணி கூத்துப்பாக்க அவசரமா
தூங்கச்சொல்லும்
பள்ளிக்கூட மேடையாண்ட
ஆட்டக்கொட்டா போட்டிருக்கும்!
எழுப்பா விட்டுட்டாக

மேலும்

இந்த நினைவலைகள் எல்லாம் எப்போதும் நீங்காதவை.. மிக மிக அருமை... 06-May-2015 2:38 pm
அருமையிலும் அருமை தோழா. கிராமத்து வாசனையில் லயித்தேன் 06-May-2015 7:42 am
நாகாமராசன் மண்டகொளத்தூர் - நாகாமராசன் மண்டகொளத்தூர் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2015 9:57 pm

சில்லென்ற காற்றே
உன்னோடு வெகுதூரம்
பயணிக்க ஆசை!
ஓரத்தில் படிந்திருக்கும்
அத்தனை நினைவுகளையும்
தட்டி எழுப்புகிறாய்!
இந்த மழைத்தெளித்த
காலைப்பொழுதுக்கு தென்றலாய்
சாமரம் வீசுகிறாய்!
கொன்றைப்பூக்களின் புன்சிரிப்பு
உன்னை அழகாய் வரவேற்கிறது!
பச்சைப்புற்கள் ஆங்காங்கே
உன்னைக்காணும் ஆவலில்
தலைநீட்டுகிறது!
தென்றல்காற்றே உனக்காக
குடைபிடிக்கிறது ஒற்றைக்காளான்!
இந்த மழைநீண்ட பாதைவரை
பயணம் போவோம் நீயும்நானும்!

மேலும்

தோழர் கவிதை பக்கத்திற்கு எவ்வாறு செல்வது.செல்ல முடியவில்லையே 26-Apr-2015 6:15 am
அற்புதம் .... கவிதை எழுதும் பக்கத்தில் இதனை இணையுங்கள்.... 25-Apr-2015 11:28 pm

சில்லென்ற காற்றே
உன்னோடு வெகுதூரம்
பயணிக்க ஆசை!
ஓரத்தில் படிந்திருக்கும்
அத்தனை நினைவுகளையும்
தட்டி எழுப்புகிறாய்!
இந்த மழைத்தெளித்த
காலைப்பொழுதுக்கு தென்றலாய்
சாமரம் வீசுகிறாய்!
கொன்றைப்பூக்களின் புன்சிரிப்பு
உன்னை அழகாய் வரவேற்கிறது!
பச்சைப்புற்கள் ஆங்காங்கே
உன்னைக்காணும் ஆவலில்
தலைநீட்டுகிறது!
தென்றல்காற்றே உனக்காக
குடைபிடிக்கிறது ஒற்றைக்காளான்!
இந்த மழைநீண்ட பாதைவரை
பயணம் போவோம் நீயும்நானும்!

மேலும்

தோழர் கவிதை பக்கத்திற்கு எவ்வாறு செல்வது.செல்ல முடியவில்லையே 26-Apr-2015 6:15 am
அற்புதம் .... கவிதை எழுதும் பக்கத்தில் இதனை இணையுங்கள்.... 25-Apr-2015 11:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே