நாகலட்சுமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாகலட்சுமி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Apr-2015
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  15

என் படைப்புகள்
நாகலட்சுமி செய்திகள்
நாகலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 11:17 am

ஒரு கை தேநீர் ஆற்ற
மறு கை தோசை சுட

ஒரு கை என்சடையை பின்ன
மறு கை எண்ணெய்சட்டி கழுவ

ஒரு கை உணவு பரிமாற
மறு கை உடைகள் துவைக்க

ஒரு கை அலுவலகவேலை செய்ய
மறு கை அடுக்களையை சுத்தம்செய்ய

ஒரு கை பாட்டிக்கு மருந்துகொடுக்க
மறு கை பால்சோறு தம்பிக்குஊட்ட

பன்னிரண்டு கை கொண்ட பராசக்தி கூட என் தாய்க்கு ஈடாகமாட்டாள்...

மேலும்

தாயின் புகழ் பாடும் சேயின் பாடல் சிறப்பு.... 23-Aug-2015 8:46 pm
அழகிய சமர்ப்பணம் தாய் தியாகம் பாடும் நின் கவி உன்னதம் 23-Aug-2015 12:08 pm
உண்மையான வரிகள் 23-Aug-2015 11:37 am
உண்மைதான்... நம்முடன் வாழும் தெய்வம் அம்மா.. சிறப்பாக இருக்கிறது கவிதை.. வாழ்த்துக்கள்... 23-Aug-2015 11:25 am
விசயநரசிம்மன் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2015 9:03 pm

நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள். அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.

நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது குழந்தைக்கு அனுமதி வாங்குவது அத்தனை எளிதல்ல. அம்மா பிடிவாதமாய் நிலாவைப் பெற்றிருந்தாள். அகன்ற நீலக் கண்கள். கச்சிதமான உடற்கட்டு. துறுதுறுப்பு, முதுகு முழுவதும் பரவும் கறுகறு கூந்தல் (இதற்கு அனுமதி வாங்க தனியாக இரண்டு படிவங்கள், ஒரு நேர்காணல்!) ‘செல்லக் குழந்தை’ என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் நிலாவைப் பார்த்தாள்.

அவளுக்கு மிகப் பிடித்த அடர்சிவப்பு உடை

மேலும்

மனிதனின் அறியும் ஆவலுக்கு எல்லையே இல்லை.. முழுமையாக கணிணிமயம் ஆனாலும் எல்லையே இல்லாமல் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறான்..நல்ல ஸ்பேஸ் ஒப்பேரா கதை கலம்.வாழ்த்துகள்... 18-Aug-2015 11:12 pm
நல்ல தேர்வு. தளத்தின் செயல்பாடுபாராட்டுக்கிறியது! 07-Aug-2015 2:07 pm
நீங்கள் சொல்லித்தான் எனக்கே இவ்விஷயம் தெரிந்தது... நன்றி! நெஞ்சார்ந்த நன்றி :-) 07-Aug-2015 12:49 pm
நெஞ்சார்ந்த நன்றி :-) 07-Aug-2015 12:48 pm
நாகலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 9:07 pm

அப்புறம் என்ற வார்த்தை மட்டும்
இல்லாவிட்டால்...
நம் காதல் உரையாடல்கள் என்றோ
ஊமையாகி நின்றுபோயிருக்கும்...

மேலும்

நாகலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 9:39 am

மருந்து சாப்பிட்டும் தீராத காய்ச்சல்
மருத்தவச் செலவைக் கண்டவுடன்
பறந்துவிட்டது...

மேலும்

ஆமாம். நோய் பறப்பது நல்லது. மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் பக்கவிளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டுமே. 30-Jul-2015 5:14 pm
நன்று 27-Jul-2015 11:05 am
உதயகுமார் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2015 3:24 pm

நீரையும் நெருப்பையும்
காற்றையும் விண்ணையும்
மண்ணையும் பேரண்டத்தையும்
வெறும் புள்ளிகளாக்கி
என்னுள் காதலெனும்
அன்பினை கோலமாக
வரைந்தவளே
ஏனடி இன்று அமைதியாக
படுத்திருக்கிறாய் ...?

உன்னை எனக்கு
தேவதையாக வரம் கொடுத்த
என் மாமாவும் அத்தையும்
கதறுவது உன் காதிற்கு
கேக்கவில்லையா ...?

உன்னையே
அக்கா அக்கா என்று
ஆசையாய் அழைத்துக்கொண்டிருந்த
என் மச்சினன்
கலங்குவதும் துடிப்பதும்
உன் கண்களுக்கு தெரியவில்லையா ...?

உன் மாமன் நானோ
எத்தனை முறை
அலைபேசியில் அழைக்கிறேன்
ஏனடி எழுந்திருக்க மறுக்கிறாய்
என்னை இனிமேல்
மாமா என்று அழைக்கவே மாட்டாயா ...?

ஐயோ கடவு

மேலும்

நன்றி தோழரே ........ 31-Jul-2015 9:05 pm
அருமை சகோ 31-Jul-2015 2:40 pm
நன்றி ஐயா 24-Jul-2015 7:46 pm
நன்றி தோழமையே..... 24-Jul-2015 7:44 pm
நாகலட்சுமி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jul-2015 8:43 pm

ஃபாரடே பார்க்க தவறிவிட்டான்
மின்காந்த தூண்டலை...
உன் சிரிப்பையும் அதனால்
தூண்டப்பட்ட என் பெருமூச்சையும்...

கூலூமின் நேர் எதிர் மின்னூட்டங்களின் கவர்ச்சிவிதிக்கு நீயும் நானுமே உதாரணமாயினோம்...

ஓம் விதி புறக்கணிக்கப்பட்டது
மின்தடை இல்லாத மின்கடத்தி ஆனேன்...
காதல் மின்னூட்டங்களை கடத்துவதால்...

மின்னியல் விதிகளில் உன்னையும் உன் காதலையும் மட்டும் காணும்
மின்பொறியாளன் ஆகிவிட்டேன்...

மேலும்

கருத்திற்கு நன்றி தோழமையே 24-Jul-2015 8:43 pm
காதல் பொறியாளர் 24-Jul-2015 7:30 pm
நன்றி தோழமையே 24-Jul-2015 2:22 pm
அப்படியே கொஞ்சம் பின்னாடி மெதுவாகி திரும்பி விருட்டென்று நகர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. நன்றுவை கொஞ்சம் தாண்டி.. தொடருங்கள் தோழமை.. 23-Jul-2015 10:13 pm
நாகலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 11:52 am

8 மட்டுமல்ல...
850 போட்டுதர வேண்டியுள்ளது
ஓட்டுநர் உரிமம் பெற...

மேலும்

அனுபவம் பேசுகிறதா தோழமையே? 24-Jul-2015 7:27 pm
ஹா ஹா ஹா...என்ன செய்வது தோழி லஞ்சத்திற்கில்லை பஞ்சம் 24-Jul-2015 1:11 pm
உண்மை! 8500 ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை நட்பே. 24-Jul-2015 12:47 pm
எங்கள் ஊரில் நான்கு இலக்கம் தோழா ! சிறப்பு ! 24-Jul-2015 12:22 pm
உதயகுமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 7:44 pm

என் வாழ்வின்
கணங்கள் யாவும்
மழலை ஜனனத்தின்
முதல் நொடியாகிவிட்டதடி ...!

இரவும் பகலும்
என் விழிகளிரண்டும்
கண்ணீருக்கு மாற்றான் தாய்
பிள்ளையாகிவிட்டதடி ...!

ஒவ்வொரு நொடியும்
என் மனமும்
கழுகி உணவாக்கிக் கொள்ளும்
உயிருள்ள ஜீவனின்
மேனியாகிவிட்டதடி ...!

நான்கு புறமும்
அடைக்கப்பட்டு
மண்ணினால் அரிக்கப்படும்
பிணமாகிப் போனதடி
என் இதயத்துடிப்பு ...!

சிறகால் தவறவிடப்பட்ட
இறகைப் போல
என் ஆன்மா தவறவிட்ட
நிழலாக அலையிறேண்டி ...!

கடலோரம் கரையொதுங்கும்
கழிவாகிவிட்டேனடி
என் கவிதையின் கருவினில்
கண்ணீராகிவிட்டேனடி ...!

வெண்ணிலவின்
இதழ் பூக்கும்
என் இரவுகள

மேலும்

வருகைக்கு மிக்க நன்றிகள் மீனா 03-Aug-2015 5:45 pm
வலியும்...வேதனையும்...வரிகளில்....நன்று நட்பே 03-Aug-2015 4:10 pm
வருகைக்கு மிக்க நன்றிகள் பபி... நான் நலம் தான் .. நீங்கள் நலமா பபி ? 24-Jul-2015 10:53 am
கனியும் காத்திருங்கள்....வாழ்த்துக்கள்.. வார்த்தைகள் அனைத்தும் தங்கள் மன வலியை உணர்த்துகின்றன.... தாங்கள் நலமா உதயா ? 23-Jul-2015 9:28 pm
நாகலட்சுமி - நாகலட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2015 1:04 pm

பரிவினை இவர்கள் வேண்டவில்லை
பரிகாசம் வேண்டாமென்றே வேண்டுகின்றனர்

அடிப்படைஉரிமைகளை இவர்கள் கேட்கவில்லை
அவமானபடுத்த வேண்டாமென்றே கெஞ்சுகின்றனர்

முன்னுரிமைகளை இவர்கள் எதிர்பார்க்கவில்லை
மூன்றாம்பாலின அங்கீகாரத்தையே எதிர்நோக்குகின்றனர்

பேருதவிக்காக இவர்கள் மண்டியிடவில்லை
பேருந்திலோர் இருக்கைக்காக மன்றாடுகின்றனர்

புரிதலுடன் இவர்களை அனுகுவோம்-முடியாவிடில்
புண்படுத்துதல் இல்லாமலாவது தவிர்ப்போம்

உறவுக்கரம் நீட்டி ஆதரவளிப்போம்-முடியாவிடில்
உதாசீனம் செய்தலையாவது நிறுத்துவோம்

ஏணிகொண்டு ஏற்றிஉதவிட முயல்வோம்-முடியாவிடில்
எட்டிற்குஅடுத்த எண்சொல்லி எட்டிஉதைக்காமலிருப்போம்

மேலும்

உங்கள் பார்வையில் சிலர் பலர் இதைதான் வேண்டுகிறார்கள் ....... நல் படைப்பு வாழ்த்துகள் .. தொடருங்கள் 22-Jul-2015 7:34 pm
நன்றி தோழமைகளே!!! 22-Jul-2015 7:16 pm
தோழர் இனியவன் நேற்று அற்புதமாக கூறியிருந்தார்..இன்று நீங்களும் அற்புதமாக படைத்துள்ளீர்கள்..உங்களின் இந்த சமூக பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.!! அருமை.!! 22-Jul-2015 3:20 pm
கனிந்த பரிவு... 21-Jul-2015 9:02 pm
நாகலட்சுமி - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2015 10:00 am

புதிதாக இணைந்தவர்களில் இன்று "Sanjana Nellai"
தளத்தார் கவனத்திற்கு. இந்தப் பெயர் உடையவர் தாகு, சங்கரன் ஐய்யா, கவிதைகளுக்கு முகப் புத்தகத்தில் (facebook) சொந்தம் கொண்டாடியவர்.,
முகப்பில் எந்தத் தகவலும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு!

மேலும்

அம்மணி அல்ல என்கிறது முகப்புத் தகவல்...... 30-Jun-2015 7:45 pm
மொத்தத்தில் அம்மணியிடம் எந்த சொந்த சிந்தனைச் சரக்கும் இல்லை என்பது தெரிந்த தகவல். 30-Jun-2015 4:57 pm
அப்படியா .....அல்வா கொடுத்துப் பார்கலாமா ? மிக்க நன்றி கவிப் பிரிய முரளி . உள்ளே நுழைந்திருக்கிறார் விசாரிப்போம் அன்புடன், கவின் சாரலன் 30-Jun-2015 2:55 pm
ஆயாவின் இடியாப்பம் படத்துடன்!!!!!! 30-Jun-2015 2:47 pm
நாகலட்சுமி - நாகலட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 6:40 pm

பக்கம் பக்கமாய் நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு நீ
பதிலேதும் அனுப்பாமல்
என் அலைபேசியை
பாலைவனம் ஆக்கினாய்!!!

சில சமயம் நீ அனுப்பும்
ம்,ஓ,அப்புறம் போன்ற
ஒற்றை வார்த்தைகள் கூட
கவிதையாகின்றன...
பாலைவனத்தில் சிறு தூரலாய்...!!!

மேலும்

உற்சாகமூட்டும் கருத்தளித்தமைக்கு நன்றி!!! 27-Jun-2015 3:12 pm
காதல் தூரல் கவிதையில் சாரல் ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:39 am
தங்கள் கருத்துகளே அழகிய கவி போல உள்ளது!!நன்றி!!!! 26-Jun-2015 8:41 pm
அழகு கவிதை ஆனந்த கவிதை ஆழியில் பயணிக்கும் படகைப் போல எளிமையான கவிதை ... நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் .... என்றென்றும் வாழ்த்துக்களுடன் எழுத்து ரசிகன் 26-Jun-2015 7:28 pm
நாகலட்சுமி - நாகலட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2015 4:21 pm

கண்ணோடு கண் நோக்கவுமில்லை
முகம் பார்த்து பேசவுமில்லை
முகப்புத்தக நண்பர்விண்ணப்பத்துடன் தொடங்கியது நம் இணையகாதல்...

பெற்றோர் நிராகரிப்பும் இல்லை
சாதிமத பிரச்சனையும் இல்லை
whatsappல் வார்த்தை பரிமாற்றம்
நின்றதால் இனிதே முடிந்தது
நம் காதல் தோல்வியில்...

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே!!! 23-Jun-2015 11:42 am
நன்று... உண்மை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Jun-2015 1:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மலர்91

மலர்91

தமிழகம்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (23)

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே