என் காதல் - உதயா
 
 
            	    
                நீரையும் நெருப்பையும் 
காற்றையும் விண்ணையும்  
மண்ணையும் பேரண்டத்தையும்
வெறும் புள்ளிகளாக்கி 
என்னுள் காதலெனும் 
அன்பினை கோலமாக 
வரைந்தவளே 
ஏனடி இன்று அமைதியாக 
படுத்திருக்கிறாய் ...? 
உன்னை எனக்கு 
தேவதையாக வரம் கொடுத்த 
என் மாமாவும் அத்தையும்  
கதறுவது உன் காதிற்கு 
கேக்கவில்லையா ...? 
உன்னையே 
அக்கா அக்கா என்று 
ஆசையாய் அழைத்துக்கொண்டிருந்த  
என் மச்சினன் 
கலங்குவதும் துடிப்பதும் 
உன் கண்களுக்கு தெரியவில்லையா ...? 
உன் மாமன் நானோ 
எத்தனை முறை  
அலைபேசியில் அழைக்கிறேன் 
ஏனடி எழுந்திருக்க மறுக்கிறாய் 
என்னை இனிமேல் 
மாமா என்று அழைக்கவே மாட்டாயா ...? 
ஐயோ கடவுளே உனக்கு  
கண்களே இல்லையா ...? 
நான் உனக்கு என்ன 
பாவம் செய்தேன் ...? 
நான் எத்துனை முறை 
உன்னிடம் வேண்டியிருப்பேன் 
எனக்கு எத்துனை 
துயரமானாலும் தாருங்கள்
என்னுயிரை வேண்டுமானாலும் 
எடுத்துக் கொள்ளுங்கள் என்று 
நீவீர் கூட 
என் உணர்வுகளை 
புரிந்துக்கொள்ள மாட்டீரோ ...? 
எம தர்மனே 
நான் என்ன செய்தால்  
என் உயிரான என் காதலியை 
விட்டு விடுவாய்  ...? 
என் இதயத்தின் அறைகளை கிழித்து 
உனக்கு காலனியாக கோர்த்து தரட்டுமா ...? 
என் மண்டை ஓட்டினை உடைத்து 
உனக்கு உணவாக சமைத்து தரட்டுமா...? 
என் குருதி நாளங்களை கிழித்து 
உனக்கு பாசக் கயிறாக திரித்து தரட்டுமா  ...? 
என் உடலினையே உருக்கி  
உனக்கு ஆயுதமாய் வடித்து தரட்டுமா ...? 
ஆறாக ஓடும் என் குருதியை எடுத்து 
உனக்கு முப்பொழுதும் அபிஷேகம் செய்யட்டுமா ...? 
நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் 
காத்திருக்கிறேன் 
இக்கணமும் என்னை 
உமக்காக அர்பணிக்க 
என்னவள் ஒருவேளை 
விழி திறக்காவிடில்
பரம் பொருளே 
உன்னை பஷ்மமாக்கிவிடுவேன்   
என்னவள் இல்லாப் 
இப்பாரினையே 
அழித்துவிடுவேன் 
ஈரேழு  உலகினையும் 
கானலாக்கி விடுவேன்
 
                     
	    
                
