திருநங்கைகள்
பரிவினை இவர்கள் வேண்டவில்லை
பரிகாசம் வேண்டாமென்றே வேண்டுகின்றனர்
அடிப்படைஉரிமைகளை இவர்கள் கேட்கவில்லை
அவமானபடுத்த வேண்டாமென்றே கெஞ்சுகின்றனர்
முன்னுரிமைகளை இவர்கள் எதிர்பார்க்கவில்லை
மூன்றாம்பாலின அங்கீகாரத்தையே எதிர்நோக்குகின்றனர்
பேருதவிக்காக இவர்கள் மண்டியிடவில்லை
பேருந்திலோர் இருக்கைக்காக மன்றாடுகின்றனர்
புரிதலுடன் இவர்களை அனுகுவோம்-முடியாவிடில்
புண்படுத்துதல் இல்லாமலாவது தவிர்ப்போம்
உறவுக்கரம் நீட்டி ஆதரவளிப்போம்-முடியாவிடில்
உதாசீனம் செய்தலையாவது நிறுத்துவோம்
ஏணிகொண்டு ஏற்றிஉதவிட முயல்வோம்-முடியாவிடில்
எட்டிற்குஅடுத்த எண்சொல்லி எட்டிஉதைக்காமலிருப்போம்