எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில்லென்ற காற்றே உன்னோடு வெகுதூரம் பயணிக்க ஆசை! ஓரத்தில்...

சில்லென்ற காற்றே
உன்னோடு வெகுதூரம்
பயணிக்க ஆசை!
ஓரத்தில் படிந்திருக்கும்
அத்தனை நினைவுகளையும்
தட்டி எழுப்புகிறாய்!
இந்த மழைத்தெளித்த
காலைப்பொழுதுக்கு தென்றலாய்
சாமரம் வீசுகிறாய்!
கொன்றைப்பூக்களின் புன்சிரிப்பு
உன்னை அழகாய் வரவேற்கிறது!
பச்சைப்புற்கள் ஆங்காங்கே
உன்னைக்காணும் ஆவலில்
தலைநீட்டுகிறது!
தென்றல்காற்றே உனக்காக
குடைபிடிக்கிறது ஒற்றைக்காளான்!
இந்த மழைநீண்ட பாதைவரை
பயணம் போவோம் நீயும்நானும்!

நாள் : 25-Apr-15, 9:57 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே