எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணி எண்ணி அலுத்துப்போன விண்மீன்கள்! நடந்தால் வழித்துணையாய் வந்த...

எண்ணி எண்ணி அலுத்துப்போன
விண்மீன்கள்!
நடந்தால் வழித்துணையாய்
வந்த நிலா!
தலையசைத்து விசிறிவிட்ட
தென்னை மரங்கள்!
தெருவோர கடைசியில் எரியும்
ஒற்றை மின்விளக்கு!
கண்ணடித்து பறந்துசெல்லும்
மின்மினிப் பூச்சிகள்!
இதோ இப்பவும் காலாற
நடந்துவர சொல்கிறது!
கோடைத்தனலை கொஞ்சம்
இளைப்பாறி விட!

நாள் : 25-Apr-15, 10:18 pm

மேலே