சம்சாரி மகள்

குறிப்பு: என் தங்கை முயற்சித்த சிறுகதை இது.கரு எளிமை தான் என்றாலும் தங்கள் கருத்துக்களை மனம் திறந்து பதிந்தால் என் தங்கை இன்னும் சிறப்பாய் எழுத உதவியாக இருக்கும்.

அக்குடும்பத்தின் தலைவர் பெயர் மோகன்.தலைவியின் பெயர் மீனா.அது ஒரு நடுத்தர குடும்பம்.இவர்களுக்கு தன்யா,ரேஷ்மி,அத்து என மூன்று குழந்தைச் செல்வங்கள் உள்ளனர்.மோகனுடைய வாழ்க்கையானது சற்று மாறுபட்டது.அவருடைய திருமணம் காதல் திருமணம்.மீனாவினுடைய வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் இவர்கள் திருமணம் மோகனுடைய வீட்டில் நடந்தது. மோகனின் வாழ்க்கையானது அதிகாலை ஐந்து மணி முதல் ஆரம்பமாகி இரவு பத்து மணியளவில் முடிகிறது.இவரின் தினசரி வாழ்க்கையாவன,காலை எழுந்து தன் வீட்டிலுள்ள நான்கு மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு தன் மாடுகளை வயலுக்கு கூட்டிச் சென்று வயலை உழுது இதற்கிடையில் தன் அன்பு மனைவி கொண்டு வரும் பழைய சாதத்தை சாப்பிட்டு விட்டு மீண்டும் தன் வேலையை தொடருவார்.பின்பு வேலை முடிந்ததும் உரிய கூலியை வாங்கி விட்டு தன் மாடுகளை வீட்டிற்குக் கூட்டிவந்து குளிப்பாட்டி அடுத்த வேலைக்குத் தயாராகிவிடுவார்.இதற்கிடையில் வீட்டில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு வேலைகளை செய்துமுடித்து மதிய நேரச் சாப்பாட்டிற்கு தயாராகி விடுவாள் மீனா.

மோகனின் தலைப்பிள்ளை கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.மற்ற இருவரும் தன்யாவிற்கு சளைத்தவர்கள் அல்ல,படிப்பில் படு சுட்டி.இவர்களுடன் மோகனின் தங்கை ரோஹினியும் அண்ணனுக்கு உதவியாக வீட்டிலேயே இருக்கிறாள்.அவளும் அண்ணன் மக்களிடம் அத்தையாகமட்டும் இல்லாமல் நல்ல தோழியாகவும் பழகினாள்.வீட்டின் பொருளாதாரம் அப்பா,அம்மாவின் உழைப்பு என்று அனைத்தையும் அண்ணன்மக்களிடம் அன்போடு எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தியும் வந்தாள்.
அன்பு,பண்பு,ஒழுக்கம் என அனைத்திலும் நேர்த்தியாகவே செதுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர் மோகனின் பிள்ளைகள் அனைவரும்!

வழக்கம் போல் மோகன் வேலைக்குச் செல்ல மாட்டினைப் பூட்டிக்கொண்டிருந்த போது தந்தி ஒன்று வந்திருந்தது.அதில் தன் மகள் படிக்கும் கல்லூரியில் கல்லூரி ஆண்டுவிழா நடக்கவிருப்பதாகவும் அதற்கு முன்பணமாக ஆறாயிரம் ரூபாய் கட்டவேண்டுமென்றும் தன்யா தந்தி அனுப்பியிருந்தாள்.மோகன் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எண்ணிப்பார்க்க நான்காயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.சற்று நேரம் யோசித்துவிட்டு தன் மாடுகளில் இரண்டினை விற்று பத்தாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கல்லூரி தேடி பட்டணம் புறப்பட்டார் மோகன்!

தன் மகள் படிக்கும் இடம் தெரியாத காரணத்தால் வருவோர் போவோர் அனைவரிடமும் கேட்டுப்பார்த்த்தார் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.என்னசெய்வது என்று தெரியாமல் ஒரு வீட்டின் முன் அமர்ர்ந்தார் மோகன்.அப்பொழுது ஒரு குரல் அப்பா என்று அழைக்கக் கேட்டு சுற்றும் முற்றும் பார்க்க தொலைவில் தன்யா ஓடிவருவதைக் கண்டார்.வெகு நாட்கள் கழித்து மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் ஓடி அணைத்துக்கொண்டார்.இருவரும் தன்யா தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர்.தன்யா தனுடைய தோழிகளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

மோகன் தான் கொண்டுவந்திருந்த பணத்தை தன்யாவிடம் கொடுக்க அவளோ அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.ஒன்றும் புரியாதவராய் மோகன் தன்யாவை பார்க்க,அவள் மோகனை கல்லூரிக்கு அழைத்துச் சென்றாள்.உள்ளே நுழைந்த மோகனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது...

கல்லூரி நிர்வாகம் தன்யாவை பல்கலைகழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ந்தேடுக்கப்படிருப்பதைப் பாராட்டி அவளின் மேற்படிப்பிற்கான செலவினை ஏற்றுகொள்வதாக அறிவித்தது!மோகனுக்கு தன் காதுகளை நம்பமுடியவில்லை.இரண்டு மாடுகளை விற்றுவிட்டு வந்தோமே அடுத்திருக்கும் மகளை,மகனை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்று கவலையில் இருந்த மோகன் ஆனந்தம் மேலிட தன் மகளை ஓடிச் சென்று அணைத்துக்கொண்டார்.

ஒரு மருத்துவர் மகள் மருத்துவராகவும் , பொறியாளர் மகள் பொறியாளராகவும் , வக்கீல் மகள் வக்கீலாகவும் ஆவாள் என்ற இந்த கூற்றை முற்றிலும் மாற்றி ஒரு சாதாரண சம்சாரி வீடு மகள் பெரிய உயரத்தை எட்ட முடியும் என்று நிருபித்துவிட்டாள்.பெருமிதம் போங்க தன் மகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார் மோகன்.

எழுதியவர் : வயோலா (17-May-15, 6:16 pm)
பார்வை : 405

மேலே