கனவாய் கரைந்த ஆசை

அதிகாலையில் எழும் போது பிரிய விடாமல்
அணைக்கும் கரம் கிடைக்க ஆசை

குளியல் முடித்து உன் இதழ்களால்
மீண்டும் நனைய ஆசை

ஒரு நாள் எனக்காக நீ சமைக்க ஆசை
அதை நான் உனக்கு ஊட்டி விட ஆசை

இருவரும் சேர்ந்து ஒரு தொழில் செய்ய ஆசை
உன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக

மாலையில் உன்னுடன் மிதி வண்டியில் செல்ல ஆசை
ஆற்றங்கரையில் உன் மடி சாயிந்து களைப்பாற ஆசை

என் தலை கோதும் போது நீ தீட்டும்
ஓவியங்களை சேர்த்து வைக்க ஆசை

மழையில் உன்னுடன் விளையாட ஆசை
தேங்கிய நீரில் கப்பல் விட ஆசை

சேர்ந்து தேனீர் அருந்த ஆசை
அத்துடன் பலவற்றை பகிர்ந்து உரையாட ஆசை

உன்னுடன் பல உரையாடல்களில் தோற்று விட ஆசை
சிலவற்றில் வெற்றி அடைய ஆசை

பசுமை நிறைந்த இடத்தில் ஒரு அழகிய சின்ன வீடு கட்ட ஆசை
அதில் உன்னுடன் மட்டுமே சண்டையிட ஆசை

சமாதானம் செய்ய நீ உதிர்த்த முத்தங்களை
மாலையாய் சூட ஆசை

இரவில் உன் மார் மீது சாய்ந்து தேன் நிலவை ரசிக்க ஆசை
நான் அழகா அந்த நிலா அழகா என்று உன்னிடம் கேட்டு நகைக்க

நிலவை விட நீ தான் அழகு என்று நீ சொல்ல
நாணத்தில் சருகாய் உறைந்து விட ஆசை

உன்னுடன் முழுமையாய் வாழ வேண்டும்
உன் மடியில் பெருமிதமாய் சாக வேண்டும்

ஆசைகள் எல்லாம் கனவாய் களைய
கணினி முன் தனிமையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்

என்றும் கனவே வாழ்க்கையாய் !!!

எழுதியவர் : Ranith (18-May-15, 6:47 pm)
பார்வை : 196

மேலே