முதிர்கன்னி கனவு
இதய குளத்தில் இரு மீன்கள்
உதயம் காணவே உறுமீன் ஓட
சதய நாளது சந்திரன் கூட
பதியம் போடுதாம் ஊர்கூடி
கதவின் சந்திலே கரிய மான்
இதய துடிப்புகள் கூடுது வான்
புதிய மாப்பிள்ளை கோர்ப்பானோ தாலி
விதியின் வாசலில் கொண்டு சேர்பானோ தோழி !
நொடிகள் வருசமாச்சு
செடிகள் காற்றிலாட
படிகள் நோக்கியே இருகண்கள்
அடிகள் சேர்க்குமோ இந்நாளும் ...!
விடியும் பொழுதை சேவல் கூவிச்சொல்ல
கடிந்து விழிக்கிறாள் கண்ட கனவென்னாகுமோ !!
நொடிந்த மனதை தேற்றி முன்னேறினால்
மடிந்த சேலையை சரிசெய்து இறையை வேண்டினாள்!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
