காதல் கவிதை

" கிராமத்துப் பையன்
பட்டணப் பெண்
ஒரு படிக்காதவனின் காதல் கவிதை """"

" ஏபுள்ள
நான் ஒரு கடன் காரனாமாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு கடன்காரனாம் புள்ள """""""""

"ஏபுள்ள
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள""""""""

"உன்னோட மனசு சொல்லாம!
உன்னோட உதடுகூட சொல்லாம!

உங்க அப்பாவோட,
உங்க அம்மாவோட,
உங்க மாமாவோட ,
உதடுலாம்
வேஷத்தோட
விசமாய் சேர்ந்து சொல்லுச்சே
ஏம்புள்ள படுச்சவனுக்குனுனு!

எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
சொல்லுபுள்ள
எப்டி புள்ள ஒத்திக்கிட்ட?

அப்ப நான்
எங்க புள்ள போனேன் உனக்கு?
அப்ப
நான் எங்க புள்ள போனேன் உனக்கு?

சொல்லுபுள்ள
அப்ப
நான் எங்க புள்ள போனேன் உனக்கு?

அப்ப உன்னோட மனசு
சொல்லல புள்ள,
அப்ப உன்னோட உதடு
சொல்லல புள்ள,

இப்ப எங்கிட்ட
சொல்லுதே புள்ள!

எப்டி புள்ள
சொல்ல முன் வந்த?
எப்டி புள்ள
இத சொல்ல எம்முன்னாடி நிக்குற புள்ள?

சொல்லுபுள்ள
எப்டி புள்ள
இத சொல்ல முன் வர்ற?

உன்னோட உதடுமா,
உன்னோட மனசுமா,

வேஷம் கலந்து
எனக்கு விசமாய் கலந்து

எங்க மாமாவோட
"பையன் கூட"
எனக்கு திருமணம்னு சொல்லுதே புள்ள!

எப்டி புள்ள இத சொல்ற?
எப்டி புள்ள இத சொல்ல வந்த?

சொல்லு புள்ள
எப்டி புள்ள இத சொல்ல வந்த?

இப்ப நான் எங்க புள்ள போவேன்?
இப்ப நான் எங்க புள்ள போவேன்?


அப்ப எதுக்கு புள்ள
என்ன பார்த்து சிறுச்ச?
அப்ப எதுக்கு புள்ள
என்ன தினமும் நெனச்ச?

அப்ப எதுக்கு புள்ள நான்?
அப்ப எதுக்கு புள்ள நம்ம காதல்?


இப்டி என்ன ஏமாத்திட்டியே புள்ள!
இப்டி என்ன கஷ்டப்படுத்திடியே புள்ள!

""'மலையே பெய்யாம
மலையுள நினைந்த
வரம் புள்ள
நீ எனக்கு!

வெயிலே இல்லாமல்
வெயிலாய் வந்த
தவம் புள்ள
உங்க குடும்பம் உனக்கு? """"""""""""""""



""'" நீ சிந்துனியே புள்ள!

கண்ணீர் கண்ணீர்
கண்ணீர்னு கண்ணீர்னு ஒன்ன!
அத அடைக்க முடியாம
அடிக்கடி அடச்சேனே புள்ள,

அதுக்காக சொல்றியா புள்ள
நான் ஒரு கடன்காரனுனு?
நான் ஒரு படிக்காதவனுனு?

சொல்லுபுள்ள
எப்டி புள்ள சொல்ற? """""""""""""""


""என் இரு கரங்களையும்
வித்தேனே புள்ள!
உன்னோட கண்ணீர துடைக்க!

அதுக்காக சொல்றியா புள்ள
நான் வேனானுனு?

சொல்லு புள்ள
எப்டி புள்ள சொல்ற? """"""""""""""""""

""உன்னிடத்தில்
ஒருமுறை அல்ல
பலமுறை அழுது
புலம்புனனே புள்ள!

நீ எனக்கு வேனும் புள்ள
நீ மட்டும்தான் எனக்கு வேணும் புள்ள நுனுநுனு!

அதுக்குப் பரிகாரம்
இதுவா புள்ள?
இப்டியா புள்ள? """"""""""""""""""""""

""" நான்
உன்ன நினைத்து
ஒரு புத்தகத்தில்
ஒரு கவிதைகூட எழுதவில்ல புள்ள,
ஒரு வரியில்
உன் பெயரைத்தான் புள்ள எழுதினேன்!

சற்று இடைவேளை விட்டு

வந்துப் பார்த்தேன் புள்ள
சற்று திகைத்து போனேன் புள்ள!

பேனாவின் முனியேல்லாம்
தேநீர் சொட்டியது புள்ள!!
அந்தப் புத்தகத்தில்
உன் பெயரின் வார்த்தைகள் எல்லாம்
தேனீக்கள் சுற்றியது புள்ள!!!! """""""""""""""


"உனக்கே தெரியாம
நானாய் நினைத்தேம்புள்ள,
உலகமே உனக்குத் தெரியாமல்
தலைவாரி போட்டுவிடுகிறது,
நீ தலைவாரும்போதேல்லாம்னுனு!!!!


சொல்லுபுள்ள
எப்டி புள்ள என்ன வேனானுனு சொல்ற புள்ள? """"""

"வலியோடு
உன் பெயரை
அடிக்கடி
என் கையில் கிருக்குவேனே புள்ள!

அப்பயெல்லாம் ரத்தம் கையில வராம
கண்ணில் வந்தது புள்ள!!

கண்ணீராய் புள்ள!
சுகத்தோடு புள்ள!

பின்புதான் உணர்ந்தேன் புள்ள!
உன் பெயரின் அர்த்தமே!
புனிதமானவள் என்று புள்ள! """"


"ஆசைகள் எல்லாம்
உன் உதட்டில் இருந்துருக்கு புள்ள!
என்னமாறி மனசுல இல்ல புள்ள,
அதான் புள்ள

இப்ப வர உன்னோட
இதயம் காதல் சொல்ல வரல,
பத்திரிக்கை குடுத்துப்போக வந்துருக்கு புள்ள! """""


""""ஏபுள்ள

உன்ன ஏ முன்னாடி,
உன்ன ஏ கண்முன்னாடி,
இனிமேலும் நிறுத்துனா,
ஒரு லட்சம் என்ன,
ஒரு கோடி என்ன ,
பலகோடி கவிதை சொல்லும் புள்ள

"""எம்மனசு""""'


குறிப்பு:இன்றும் படிக்காதவனின் சில காதல்
கடலைக்கு மட்டும்தான்
வாழ்க்கைக்கு அல்ல
இந்தமாறியான படைப்பு
பிறரை புன்புடுத்தும் நோக்கில்
எழுதப்படவில்லை....

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (19-May-15, 4:53 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 334

மேலே