நான் மயங்கிக் கிடக்கின்றேன்

உன் உறவு தந்த நெருக்கத்தில்
உறங்கிப் போகிறேன்.
நான் தினம் உறங்கிப் போகிறேன்.
உன் கனவு தந்த கலக்கத்தில்
கலைந்து எழுகின்றேன்.
உறக்கம் கலைந்து எழுகின்றேன்.
உன் வார்த்தை தந்த இசையினிலே
வாழ்ந்து வருகின்றேன்.
நான் நித்தம் வாழ்ந்து வருகின்றேன்.
ஆனாலும் உறவே
உன் மடியில் விழுந்து அழுவதற்கே
மயங்கிக் கிடக்கின்றேன்
உன் முன் மயங்கிக் கிடக்கின்றேன்.....