நட்பு

உதய வாழ்க்கையில் தாயின் நெஞ்சம்
அந்தி வாழ்க்கையில் நட்பின் நெஞ்சம்
எளிதில் கிடைப்பது நட்பு
அதை தக்கவைப்பது பொருப்பு
சொல்ல முடியாத எண்ணங்கள் கோடி
சொல்லக் கூடிய உறைவிடம் நட்பே
கோடி மலர் பூத்த சோலையிலே
பாடித் திரிந்த காலங்கள் இனிதே
வேறுபட்டு இடம் பெயர்ந்தாலும்
கூடி சேர்ந்த தருணங்கள் மனதில்
தாடி நரைத்துவிட்ட போதிலும்
காணும் காட்சி ஒன்றே
நாட்கள் கடந்து சந்தித்தாலும்
தோன்றும் உவகை பெரிதே
பாடுபட்டு தேடிய காலங்களை விட
ஒய்வு பெற்று மீண்ட காலங்கள் பொன்னே
காதல் குடும்பம் பிள்ளை ஆன போதும்
நட்பின் ஆழம் மாண்பே
காலம் கடந்து பார்த்தாலும்
கோலம் மாறாது நட்பே
எல்லையில்லா வானினும்
நட்பின் நீட்டம் நெடிதே
எஞ்சியுள்ள காலம்வரை
மீண்டும் பார்க்க தேவை
நட்பே உன் முகம் ஒன்றுதான்
நிழல் கொடுக்கும் மரமன்றோ