பெண்ணே

பெண்ணே!
சுதந்திர தேவி சிலையாக இருக்கிறாய் நீ...
ஆம். வெறும் சிலையாக மட்டுமே...

பெண்ணே!
உன் நிலைதான் என்ன?
உள்ளே உருகி
வெளியே வெளிச்சம் தரும்
மெழுகுவர்த்தியோ?
இளைப்பாறிச் செல்ல
உதவும் சுமைதாங்கியோ?
இன்னல்களாக வரும் இடியைத் தாங்கும்
இடிதங்கியோ?

பெண்ணே!
நதிகளுக்கேன் உன்பெயர் வைத்தார்கள்?
கடைசி வரை ஓடிகொண்டே இருப்பதாலா?
காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தாலும்
செல்லும் பாதையை செழிப்பக்குவதாலா?

பெண்ணே!
மண்ணையும் பெண் என்கிறார்களே!
மிதிக்கப்படுவதாலா ?
அழுகை என்ற உணர்ச்சி
உனக்காகவே படைக்கப்பட்டதோ!!
பெண்ணே!
யாதுமாகி நிற்பவளே.
உன் அன்பு, பாசம், தாய்மை
இவை மானுட குலத்திற்கு கிடைத்த வரம்.
வரம் கொடுத்து கொடுத்து கை சிவந்தவளே
வாழ்க! நீ என்றென்றும்..........

எழுதியவர் : ராஜி (20-May-15, 3:36 pm)
Tanglish : penne
பார்வை : 85

மேலே