யாரடி நீ மோகினி - ப்ரியன்
![](https://eluthu.com/images/loading.gif)
அறைகதவு திறந்துவர
போராடிய நீ
என் மனக்கதவை
உடைத்தது எப்படி!
முன்னெற்றி தெரிந்திட
அழகாய் வாரிசீவியே நீ
என் நெற்றியெழுத்தை
மாற்றிவிட்டாயே!
பேச்சில் நாக்குதுறுத்தி
உதடு தடவுகிறாய் நீ
நனைகிறது காய்ந்திடும்
எந்தன் உள்ளம்!
வார்த்தைகளை அளந்தே
பேசிடும் நீ
வனப்பில் மட்டுமேனிந்த
தாராளம்!
மூக்கின்மேலே மச்சம்
ஒன்றுமட்டும் இருந்திட
நானுன்னை உற்றுப்பார்க்க
கோபமும் குடியேறுதோ!