இளம் விதவையின் உணர்வு

சேலையின் வண்ணம் மாற்றிக்கொண்டேன்.
மெலிதாய் பொட்டும் வைத்துக்கொண்டேன்.
தாய்மாமன் மகள் திருமணம் என்பதனால்
கணவன் இறந்த 90 நாட்களுக்குப்பின்
முதல் முறை வெளிச்சம் பார்க்கின்றேன்.
மண்டபம் நுழைந்தேன்.
இப்போது
அனைவருக்கும் நான் காட்சிப்பொருளானேன்.
மண்டப வாயிலில் நின்று வரவேற்கும்
கோமாளி பொம்மையையும் என்னையும்
ஒன்றாகவே பார்க்கிறார்கள்...
ஓடிவந்த அத்தை
அன்பாய் நலம் விசாரித்து
மணமக்களின் முகம் தெரியாதபடி
ஒரு இருக்கை ஒதுக்கிக் கொடுத்தாள்..
இப்போதுதான் புரிகிறது
உடன்கட்டை ஏறுவதின் சௌகரீகம்
வலியும்,உயிரும் ஒரே நாளில் போயிருக்கும்....