காதலி தேவை
காதல்
பருவத்தின்
பசி,
ஆசை,
விருப்பம்,
ஏக்கம்,
துன்பம்,
துயரம்,
தேவை என எல்லாமும் தான்
இவை அனைத்தையும் அனுபவிக்க
எனக்கும் ஆசை உண்டு
சேர்ந்து அனுபவிக்கத்தான்
ஒரு காதலி இல்லை
முக நூலில் மூழ்கி போனவர்கள்
வாட்சப்புக்கு வாழ்க்கைபட்டவர்கள்
டுவிட்டருக்குள் கலந்துபோனவர்கள்
செல்போன் பேசியே
காலத்தை கழிப்பவர்கள்
குறுஞ்செய்தி எழுதி எழுதியே
விரல் ரேகை தேய்ந்து போனவர்கள்
என எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனால் இவர்கள்
பெண்கள் பெண்களாய் இல்லை
யார் யாரோ லைக் போடவேண்டும்
என்பதற்காய் தன்னை விதவிதமாய்
புகைபடம் எடுத்து
இணையத்தில் பறக்க விடும்
இவர்களுக்கு மத்தியில்
என் என்னவளை
நான் மட்டுமே ரசிக்கவேண்டும்
என நினைக்கும் எனக்கு
எங்கே கிடக்கும் காதலி ?
யாரோ முகம் தெரியாத
மூன்றாம் மனிதரிடம் கூட
தன் ஆசை,
கனவு,
நினைவு,
என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும்
மனப்பான்மை உள்ள
பெண்கள் மத்தியில்
எல்லாவற்றையும் என்னோடுமட்டுமே
பகிந்து கொள்ள ஏங்கும்
எனக்கொரு காதலியை
எங்கே போய் தேட ?
சேலை குறைந்து
தாவணியை மாற
அதுவும் குறைந்து
துப்பட்டாவாய் மாற
துப்பட்டா செய்யவேண்டிய வேலையை
காற்றில் பறக்க விட்டு
முகத்தை மூடிகொண்டு
நடக்கும் பெண்களுக்கு மத்தியில்
அரைகுறை ஆடை அணிந்து
அணிவகுக்காத ,
செல்போன் பேசியே
வார்த்தைகளை துளைக்காத,
குறுஞ்செய்தி எழுதி எழுதியே
விரல் ரேகை தேயாத,
இன்னொருவனை இறுக
கட்டி அணைத்த படி
பைக்கில் பறக்காத,
பார்க்கின் மறைவிடங்களிலும்
தியேட்டரின் இருட்டிலும்
திருட்டு குடித்தனம் நடத்தாத,
முகநூளிலும்
வாட்சபிலும்
இன்னும் பிற இணையத்தில்
கணக்கு துவங்காத,
அழகு நிலைய பயணத்தை
அன்றாட வாடிக்கையாக்காத
ஒரு பெண்ணை எங்கே போய்
தேடுவேன் காதல் கொள்ள
பெண்கள் குலம்
தவறு என்று நினைப்பவன் அல்ல
ஆனால் பெண் குலத்தில்
நடக்கும் தவறுகளை
சகித்து கொள்ள முடியாதவன் மட்டுமே
காதலி தேவை
ஆயிரம் மாற்றங்கள் ஆட்கொண்ட பொழுதும்
தன் நிலை மாறாத ஒருவள்
காதலியாய் தேவை

