கோபுரங்கள் சாய்வதில்லை

கோபுர வாசல் முன்பு...
கறுத்த தேகம்.
நிறம் மாறிய கூந்தல்.
பிஞ்சு எலும்புகளில்
சுருங்கிய சதைகள்.

ஒட்டிய வயிற்றில்
நீர் கொஞ்சம் தேங்கினால்
மீன்களும் துள்ளி விளையாடலாம்...
கிழிந்த பாவாடையில்
வெற்றுப்பாதத்துடன் வாடுவதைக்கண்டு
நிழலும் நீர் சிந்தும்...

ஒருவேளை உணவை வேண்டி
கையேந்திய குட்டிமையில்.
எதிரே வந்த மேல்த்தட்டு மேதாவி
கையை தட்டிவிட்டு சென்று
கோவில் உண்டியலில்
போட்ட தொகை மூன்று லட்சம்...

எழுதியவர் : ராஜ் நாராயணன் (30-May-15, 7:08 pm)
பார்வை : 75

மேலே