மகநாய்

சிறு ஓட்டு வீடு
அதில் ஒடுங்கி கிடந்த முதியவர்.
கம்பிகள் இல்லா ஜென்னல்கள்
பல உண்டு கூறையில்...

வெயில் என்றாலும் சரி!
மழை என்றாலும் சரி!
உத்தரவின்றி உள்ளே வருவதே
அவர்கள் வழக்கம்...

மடிந்த நரம்புகள்
கைவிட்ட மகன்கள்
ஒடிந்த உடலுடன்
உழைக்கின்ற உயர்ந்தவர்...

துணையின்றி துறவியாய் தனிமையில்
துணைக்கு தெருநாய் மட்டும் அருகாமையில்...
உண்ணும்போது உறவாய்!
உறங்கும்போது காவலாய்!
மகனை மறக்க செய்யும் மகநாய்...

எழுதியவர் : ராஜ் நாராயணன் (30-May-15, 6:47 pm)
பார்வை : 42

மேலே