கட்டவிழ்த்தது யார்

சாலையோரம் கையேந்தும் கன்றுக்குட்டிகள்...
கட்டவிழ்த்தது யாரென தேடித்திரிந்தேன் ...

பஞ்சம் என்றார்கள்!
பசி பட்டினி என்றார்கள்!
கள்வர்கள் என்றார்கள்!
சூழ்நிலையின் சூழ்ச்சி என்றார்கள்!

மலராத பூக்களுக்கு ஏன் இந்த
பொய்யான முட்கள்?
பஞ்சம் என்றால் நாம்
பகிர வேண்டாமா?
பசி என்றால் நாம்
உணவளித்திட வேண்டாமா ?
கள்வர்கள் என்றால் நாம்
கண்டிக்க வேண்டாமா?
சூழ்நிலை என்றால் நம்
கைகள் சூழ வேண்டாமா?

இப்பொழுது புரிகிறதா,
கட்டவிழ்த்தது யார் என்று தெரிகிறதா?

எழுதியவர் : ராஜ் நாராயணன் (30-May-15, 6:29 pm)
பார்வை : 49

மேலே