கனவானது என் நிஜமான காதல்

மௌனம் தான் என் மனதில்
நீ சூடிய மகுடம்
மறைவான இடத்தில் சூடியதால்
மரியாதை இழந்த மகுடமாகிவிட்டது
அறியாத பார்வை அன்று நீ பார்த்தது
அழுகை கூட அடம்பிடித்து அழுகின்றது
தெரியாதவராக நடிக்கின்ற போது
உன் பார்வைகள்
ஈன்ற ஈட்டிக்கதிர்கள்
என் சின்னதோர் இதயத்தைக்குடைந்து
போன நேரத்தில் கூட
இறந்திருக்கலாம் போலிருக்கின்றன
இன்று பிரிவினால் உருவாகிய
கூராயுதம் குத்துகின்ற போது
இப்படித்தோன்றுகின்றது
மல்லிகை சுமந்த கூந்தலும்
மனதில் கற்பனை கலந்த கனவும் ஒன்றாகிப்போனது
மல்லிகை வாடியதும் வீசுகின்றாய்
இரவு விடிந்திட கலைந்து போகின்றது
கனவுகள்