புழுக்கம்

இன்று மதியம் இரண்டு மணி இருக்கும் காற்று அவ்வளவாக இல்லை ஒரே புழுக்கம் ஆதாலால் வீட்டின் வெளிப்புறத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தேன் .. அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது !!!!!!

எங்கோ ஒளிந்துகொண்டிருந்த அந்த குரல் மின்சாரம் தடைபட்டதால் ஒலித்துகொண்டிருந்தது .ஆகாஷ் வாணி கோடை fm 100.5 என்று ... நேயர் விருப்பமாக எங்கள் தங்க ராஜா என்ற படத்தில் இருந்து இரவுக்கும் பகலுக்கும் என்ற பாடலை கரூரில் இருந்து ராஜா என்ற நேயர் கேட்டிருக்கிறார் .இதோ அந்த பாடல் பண்பலை வழியாக என்று ஒலித்தது .. காத்து வேற இல்ல இதுல இந்த பழைய பாட்டு வேறயா என்று மனம் புழுங்கியது. அப்பொழுது தான் அந்த பாடல் அதன் பல்லவியை என் செவிக்குள் அனுப்பியது..

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை


இந்த ஆறு வரியும் எனக்கு உணர்த்திவிட்டது இது புதிதாக திருமணமான தம்பதியின் முதல் இரவு மனநிலையை விளக்கும் பாடல் என்று . TMS மற்றும் சுசீலா அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும், இசை எந்த வித இடையூறும் செய்யாமல் செவியில் கொண்டு வந்து சேர்ந்து மனதில் நிறைந்தது .இந்த பாடலை கண்டிப்பாக கண்ணதாசன் அவர்கள் தான் எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே சரணம் தொடங்கியது .


பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்

பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்


இந்த சரணம் என்னை புழுக்கத்தில் இருந்து விடுவித்து குளிர் பிரதேசத்திற்கு அழைத்து சென்றது கூடவே என் வருங்கால மனைவியையும் அழைத்து வந்தது ..ஆனால் முகம் மட்டும் தெரியவில்லை,அப்படியே டூயட் பாடி கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அந்த பாடல் மறைந்து என் சுய நினைவுக்கு திரும்பினேன் அருகே இலவசமாக மன்னிக்கவும் விலையில்ல காற்றாடி சுழண்டு கொண்டிருந்தது ..!!!!!

எழுதியவர் : அருண்வாலி (1-Jun-15, 6:46 pm)
Tanglish : pulukkam
பார்வை : 306

மேலே