அவள் என் அனிச்சமலர்என் முதல் கதை

"சிரிப்பு உலகத்தில்
உதித்த
சிகப்பு சூரியானால்
மலர்ந்த
சிரிப்பு மலர் அவள்"
என்று ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்.
(அத விடுயா இதெல்லாம் ஒரு கவிதை யா??? னு தான கேக்குறீங்க)அதை நீங்கத்தான் முடிவு பண்ணணும்...அவளை பார்த்ததும் தோன்றியது இதுதான்.

இன்று காலை 8:15am பள்ளிச்செல்லும் வழியில் நான்.பேருந்தும் வந்துவிட்டது அமர இருக்கை கூட கிடைத்துவிட்டது.பேருந்து நகர்ந்து 7 நிமிடம் இருக்கும். NGO colony பேருந்து நிறுத்தம் என நினைக்கிறேன் அதில் சிலபேர் ஏறினர்,சிலபேர் இறங்கினார்.பேருந்து நகர......ஏதேச்சையாக பின்புறம் திரும்பி பார்க்க அவள் நின்றுகொண்டிருந்தாள்.அவள் என்றால் அவள் தான்...என் கற்பனைக்கு சொந்தக்காரி....
அவள் அழகு என்பதை காட்டிலும் ரொம்ப அழகாக இருந்தாள்.அவள் பச்சை வெள்ளை சுடிதாருக்குள் புகுந்திருந்தாள்...அவள் உடுத்தியதால் என்னவோ அதிக மெருகுடன் காணப்பட்டது.ஒரு ரோஜா சூடிஇருந்தாள்.....அதுவும் அவளுக்கே உரித்தான அழகை கொண்டிருந்தது....

அவள் ஒரு அதி உன்னதமான படைப்பு...அவள் தோழிகளுடன் பேசுவதுக்கூட ஆயிரம் வெண்ணிலா ஓரே நேரத்தில் மலர்வதை போல் இருந்தது....
பிரம்மன் இவளை செதுக்கும் போது மட்டும் சற்று கலைத்திறனுடன் செயல்பட்டு இருப்பான் போல.....

இவள் யார்? எங்கிருந்து வாருகிறாள்?பெயர் என்ன? என்னவா? இருக்கும் என்றுக்கூட இதயம் யோசிக்க தொடங்கியது...

அவள் பெயர் நிச்சயம் அனிச்சமலர் ஆகத்தான் இருக்கும்...என் பாட்டி சொன்ன கதைகளில் ஒன்று அது.... கதை சரியாக நினைவில் இல்லை....ஆனால் பூமிக்கு வந்த முதல் அழகான தேவதை அவள் தானாம்.இவள் அந்த தேவதையாக கூட இருக்காலாம் என்றுக்கூட சிந்தித்தேன்.

ராமன்புதுர் வந்திடிச்சி....என்ற கரரான குரல். இது அந்த கன்டேக்டர் உடையது...அந்த குரல் என்னை சுயநினைவிற்கு கொண்டுவந்தது.என் அனீச்சமலர் தற்போது என் இருக்கைக்கு வலதுபுறம் அமர்திருந்தாள்....
அங்கும் இங்கும் கன்டேக்டர் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார். இவளிடம் வந்து எங்கம்மா போகனும் என்றார்....?
Little flower போகனும் என்றாள்...7 ருபாய் என்றார் கனிவாக.இவள் அண்ணா school pass என்றாள்...பாஸை காட்டும்மா என்றார் .... அவள் பேக்கில் கைவிட்டு தேடிபப்பார்த்தாள் கிடைக்கவில்லை போல...அண்ணா மறந்து வீட்டுலேயே வச்சிட்டேன் என்றாள் தயக்கத்துடன்....

கன்டேக்டர் சற்று கராராக அடுத்த ஸ்டாப்ல இறங்கிடு என்றார். எனக்கு அந்த இறக்க மனசு எங்க இருந்து வந்தது என்று தெரியவில்லை...
20 ருபாயை நீட்டி அவங்களுக்கும் டிக்கெட் எடுத்திடுங்க என்றேன்.
கன்டேக்டர் சற்று நக்கலான சிரிப்புடன் டிக்கெட்டையும் சில்லரையும் அவளிடம் கொடுத்து சென்றார்.

நான் இறங்க வேண்டிய இடம் வந்தது என்ன ஆச்சரியம் அவளும் அங்கே தான் இறங்கினாள்...மீதி சில்லரையை என்னிடம் கொடுத்துவிட்டு thanks என்றாள் என் அனிச்சமலர். நான் சற்று வழிந்து கொண்டே உங்க உங்க பெ....பெ....பெயர் என்ன என்றேன்? அவள் சப்திகா என்றாள்.இன்றுமுதல் இதுவும் தேவதை பெயர்தான்.....

எழுதியவர் : நவின் (1-Jun-15, 9:05 pm)
பார்வை : 753

மேலே