மயக்கம் என்ன
நிமிர்ந்து எழுந்து
அமர்கையில் நீட்டி
முழங்கி கிடக்கிறது
நீர்த்துப் போன
நினைவுகள்....
தனக்கே வரும்
வாசனையில்
மதுவாகி குழறுகிறது
பார்க்காத
பார்வைகள்....
இன்னும் இன்னும்
அகலமாகும்
கைகளுக்குள் அடங்கி
விடும் வானமும்
மிதக்கிறது அனாதையாய் ......
யாதுமாகிய சாவும்
யோகியாகும் தருணமாக
தத்துவம் உதிர்க்கிறது
தேங்கிய போதையின்
திடீர் கலைதலாய்.....
நரம்பின் முடிச்செல்லாம்
நம்பிக்கையின் மகத்துவம்
கரைத்த போது,
புன்னைகைத்த கண்களில்
வழிந்தோடுவது
எனக்கு மது
என் வீட்டில் இருப்பவர்க்கு
கண்ணீர்
மதுவின்றி போனாலே
மயக்கங்கள்
என்னாகும்...என்பதாக
உடைகிறது
மனப் போத்தல்...
கூடவே மௌனமாய்
வீட்டுக் குடுவையும்....
கவிஜி
#I support Nandhini #