தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி சட்டப்பேரவைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி சட்டப்பேரவைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது......?

என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வினா எழுப்பியிருக்கிறது.

மக்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
ஆந்திரா, கேரளா ஆகிய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்படுகின்றன.
கர்நாடக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் எந்தவித வெட்டும் செய்யப்படாமல் அப்படியே தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால், தமிழகம் மட்டும் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பத் தயங்குவது சரியல்ல.எனவே உரிய விளக்கம் தேவை என்று கூறியுள்ளது உயர் நீதிமன்றம்.

பத்தாண்டுகளுக்கு முன் சில தொலைக்காட்சிகளுக்கு மட்டும் முழுமையாக ஒளிபரப்பு செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கிவிட்டு...
சில நாட்களிலேயே நிறுத்திவிட்டு....செய்தித்துறை மூலமாக சென்சார் செய்து ஒளிப்பரப்பினார்கள்.....

எப்படியோ...சட்டசபை நிகழ்சிகளை லைவ்வாக பார்ப்பதற்கு தமிழக மக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா...? அல்லது மறுக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்...

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Jun-15, 4:25 pm)
பார்வை : 171

மேலே