விவசாயி

காளையன் கொண்டு ஏர் உழுது
வானம் நம்பி நாற்று நட்டு
மாரி கொண்டு நீர் பாய்ச்சி
புவி குளிர அறுவடை செய்து
ஏற்றமாய் மூட்டை கட்டி,நெல்லுச் சோறு
நீ உண்ண,நான் உழைத்தேன்
விலைகொண்டு என்னை ஏய்த்து,நீ வாழ்கிறாய்!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!
அல்ல உன் சந்ததி தான் வீழுமடா!!

எழுதியவர் : லோகேஷ்கண்ணன் (4-Jun-15, 10:58 pm)
சேர்த்தது : லோகேஷ்கண்ணன் ச
Tanglish : vivasaayi
பார்வை : 896

மேலே