கல்லின் தற்கொலை-

என்னை செதுக்கினால் சிற்பங்கள்...
தேய்த்தால் நவரத்தினக்கற்கள்....
குடைந்தால் குகைகள்....
அடுக்கினால் அணைகள்.....
கறண்டினால் கல்வெட்டுகள்....
கறண்டப்பட்டு அடுக்கப்பட்டு குடைந்தெடுக்கப்பட்டு தேய்க்கப்பட்டு செதுக்கப்பட்டு பெயர் பெற்ற ""கல்"லாகிய நான் இன்றோ சொல்ல முடியாத துயரங்களை அடைந்துகொண்டிருக்கிறேன்....
சாதி சண்டையில் மண்டையை பதம் பார்க்க...
ராசிக்கற்கள் என்ற பெயரிலே நாட்டை நாசமாக்க...
சாலையோர மைல்கற்களை சாமியாக்க.....
"கல்குவாரி"களில் குவாரியை மட்டும் விட்டு விட்டு கற்களை தோண்டி விற்க...
சில நாட்டுப்பற்றாளர்களுக்கு நாட்டுப்பற்று மட்டைப்பந்து விளையாட்டில் மட்டும்தான் இருக்கிறது...
அவர்கள் என்னை மட்டைப்பந்து விளையாட உபயோகிப்பதில்லை...
மாறாக மட்டைப்பந்து வீரர்களின் வீட்டைக்குறி பார்த்து உடைக்க உபயோகிக்கிறார்கள்......
வேண்டாம் போதும்...இனி என்னால் முடியாது...
கல்லாய்ப்பட்டதெல்லாம் போதும்....
உடைந்து மண்ணாய் மாறி என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்...
இப்படிக்கு,
"""''கல்"''''