பேராசிரியர்!

நல்லவராய் வலம்வரும்
வல்லவர் பேராசிரியர்!
சேதியை சொல்வார் - கல்வி
போதனை செய்வார்!
சிரித்துப்பேசி
சிரிப்பலையில் கிறக்கம்செய்து
சரிபடுத்துவார் - மாணவியை
வசபடுத்துவார்!
தண்டிக்கும் தோரணையில்
சத்தமிட்டு கத்தி - அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்வார்!
மாணவிகளின்
மனுக்களை மட்டும்
மறுபரிசீலனையின்றி
மன்னிப்பு வழங்கி
அறைக்கு வர சொல்வார்!
அவசியம் வர செய்வார்!
அறைக்குள் மாணவியை
நாசுக்காய் தொட்டு வைப்பார்!
தீயை பற்ற வைப்பார்!
புத்தகத்தை நீட்டும் மாணவியின்
கையில் அழுத்தி வைப்பார்!
காதலை ஏற்றி வைப்பார்!
காமத்தை சேர்த்து வைப்பார்!
நடவடிக்கைக்காக
தலைமை பேராசிரியரை அணுகி
புகார் மனு செய்தால்
புகார் பெட்டி
வாசலைத் திறக்காது!
வாதத்தைக் கேட்காது!
மொத்தத்தில்
அத்தனையும் வெளிவேசம்!
விடியாத சனிவேசம்!
இப்படி
எத்தனை எத்தனை நாள்!
எத்தனை எத்தனை மாணவிகளை
இறுதியில் தொல்லைநாள்!
தீர்ப்புக்கான மறுமைநாள்!
கூனிக்குறுகி பேராசிரியர்!
வெளிவேடக்காரரே
உங்களுக்கு ஐயோ கேடு!