துளிப்பாக்கள் -முஹம்மத் ஸர்பான்

மாணவன்
--------------
மனதில் அலை மோதுகின்ற
எண்ணங்களை ஞானக்கண்ணில்
பதிந்த காட்சியோடு ஒப்பிடும் உவமை

ஆசிரியர்
--------------
அறிவு சார் தகவல்களை
எத்திவைக்கும் உயிரோட்டமான
அறிவுக்களஞ்சியம்.

மருத்துவன்
------------------
உயிர்கள் பிறக்கும் போது
பிரம்மனாகவும் மாயும் போது
எமனாகவும் விஸ்வரூபம் கொள்பவன்.

காவல் அதிகாரி
------------------------
மனித உருவில் அய்யனார் சிலை
நீதி தேவதையின் கண்களை கட்ட முயல்பவரின்
முட்டி உடைக்கும் லத்திகள்

நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.

காடு
-------
புஷ்பங்களின் அமுதிலும் ராகம் அமைக்கும் வண்டினங்கள்
தென்றலின் சருகுகள் அசையும் தெவிட்டாத மெல்லிசை
சரஸ்வதி படைத்த மனித விரல்களால் அழுக்கடையாத ஆர்மினியப் பெட்டி.

மேகம்
-----------
விண் எனும் காகிதத்தில்
கடவுள் செதுக்கிய பளிங்குச் சிற்பங்கள்
அழகான முகில் குடங்கள்.

மழை
----------
துளித்துளியாய் சிந்திய தூரிகைகள்
மண்ணில் எழுதிய சித்திரங்கள்
சமுத்திரங்கள்.

புயல் மையம்
வந்தால் மழை
மண்ணில் வரும்

வானவில்
---------------
நீல நிற வானில் ஏழ் வர்ண
தூரிகையால் கோடிட்டு
கண்ணாம்பூச்சி ஆடுகிறது வானவில்.

தந்தை
----------
இதழில் பேசிய மழலைக்கு
இலக்கணம் கற்றுத்தந்த
முதல் ஆசான் தந்தை

அக்கா
----------
மனதின் பாரத்தை இறக்கி
வைக்க தோள்சாய்ந்த தோழி
எனை தாங்கும் இரண்டாம் அம்மா.

அண்ணன்
--------------
பத்து மாதம் கழிகையிலே
தத்து பிள்ளையாய் தோழி
தூக்கி வளர்த்தவன்

தம்பி
--------
என் மனைவியின்
கருவறையில் கருத்தறிக்காமல்
நான் வளர்க்கும் பிள்ளை

பாட்டி
--------
என் அன்னையை பத்து
மாதம் சுமந்து அன்னையானவள்
என்னை சுமக்காமலே செவிளியானாள்.

தாத்தா
-------------
பாதம் மேல் பாதம் வைத்து
வாழ்க்கை பாதையை கடக்க
கற்றுத்தந்த வில் வித்தைக் காரன்

வாழ்க்கை
--------------
கடிகாரத்திலுள்ள நிமிட
முள் நிற்காமல் வேகமாய்
சுழன்று ஓடுவதைப்போல..........

ஊனம்
--------
ஐம்புலங்கள் குறையானவனை
ஊனன் என்றழைத்து பல மனிதர்கள்
உள்ளத்தால் ஊனமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

காலம்
---------
இரைந்தோடும் கடலும்
விரைந்தோடும் காலமும்
யாரையும் காத்து நிற்பதில்லை

கொள்கை
---------------
கட்புலனாகாத கொள்கைகள்
இருபத்தியோராம் நூற்றாண்டில்
கண் எதிரே நடத்துகிறது கொள்ளை

எழுத்து
-----------
என் உடம்பில் உயிர் உள்ளவரை
என்னோடு பயணிக்கும்
இரண்டாம் நிழல்.

நாத்திகன்
----------------
உலகம் என்பது மெய்
மறுமை என்பது பொய்
என்று விவாதிக்கும் அறிஞன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Jun-15, 12:01 am)
பார்வை : 266

மேலே