கட்டியுள்ளம் ஈர்க்குதே
வண்ண வண்ணப் பூக்களின்
***வாசம் கொள்ளை கொள்ளுதே
வண்டும் சுற்றிச் சுற்றியே
***வந்து தேனை உண்ணுதே
மண்ணைத் தொட்ட வான்துளி
***மைய லாகிச் சேர்ந்ததே
கண்ணில் கண்ட காட்சியும்
***கட்டி யுள்ளம் ஈர்க்குதே !
( தேமா + தேமா + கூவிளம் )

