விஷ்வரூபம்
வெண்பனி போர்த்த வடந்தை நோக்கு மாமலை காண்
வெள்ளி மகுடம் தரித்த பச்சை மாமேனி காண்
மாலை மேற்கால் மறையும் ஒளிரும் கதிரவன் காண்
மாலை கிழக்கால் அரும்பும் வெண்மதி காண்
இரு தோள் அமர்ந்தொளிரும் சங்க சக்கிரம் காண்
வானளாவ நின்ற பச்சை மாமலை ரங்கனை கண்டேனே !

