வேல்இயல்

அந்த தேவதையின்
இரசாயனப் பேச்சாலும்
பொட்டாசியப் பொட்டாலும்
அமிழ்ந்து போனவர்களில் நானும் ஒருவன்...

மல்லிகை நெடி அடித்தாலே
அந்த அழகு பியுரெட் பொம்மை
என் ஓளிவலைக்குள் இருப்பதாய் நினைக்கிறேன்..

ஓவியக் கண்காட்சியில் கூட
இந்த பொன்னிற வானவில்லை தவிர
வேறு ஓவியமே தெரியவில்லை ...

கடல் வெப்பமாகி மேகமாகி
மழையாகப் பொழியும் என்றே அறிவியல் மொழிகிறது ...

என் வியர்வையெல்லாம் இவள் உஷ்ண ஓளி கண்டே
பொழிகிறதே ..இது வேதியல் காதலா?..

வெப்பச்சலனம் என் மூளைக்கு புரிகிறது..
இந்த காதல் சலனம் எந்த இயலில் புரியும்..

இதயசுவர்களுக்குள் மின்பொறி அனுப்பும்
இந்த திராவககன்னியை என் காதல் மொழியால்
தணிப்பேன் ..
தமிழ்மொழி பேசி காதல் செய்வேன் ...
வேதியலை தமிழ் ஆக்குவேன்..

நம்பிக்கையோடு.. க.நிலவன்..

எழுதியவர் : க.நிலவன்.. (12-Jun-15, 12:33 pm)
சேர்த்தது : க நிலவன்
பார்வை : 66

மேலே