நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று - மலர் 1991

மழைபெய்தபின்
இலைகளில் நீர் சொட்டுவது மாதிரி...
அவளின் ஞாபக கணுக்கள் எனை
தூக்கதிலிருந்து துண்டித்துக்கொண்டே இருந்தது...

இரவுநேர தார்சாலையில் யாரும் அரவமற்ற
திருப்பத்தில்..மழைத் தூரலின் பிசுபிசுப்பில்..
சாலையில் ஈரப்பதம்ம்..

தூரத்திலே வந்த காரின் விளக்கொளியில்
என் நிழலின் நீளம் அதிகரித்து பின் குறைத்தது ..

அந்த இருட்டுக்கு இடையில் வண்ணவில்லை
கண்டு .. குளிருக்கு நடுவே இதயமும் கரைந்தது ..

வழக்கம் போலவே கவிதைகளில் நனைந்தது என் கற்பனை..
இன்று கனாவில் மிதந்தது என் இதயமும்..

என்றோ விழப்போகும் மழைத்துளிக்காய்
காத்துக்கிடக்கும் தவளை மாதிரி
இதயம் அதிகமாய் துடித்தது...

சிலநாட்கள்... இரவு நிலா இன்று பகலிலேயே ..
மிக நெருக்கத்தில் பௌர்ணமியாய் மின்னும் நிலாப்போல
அந்த நட்சத்திரத்தின் அருகே நான்!!!

அந்த நிமிடத்தில் சூடு வைத்திருந்தாலும் தெரிந்திருக்காது..
அப்போது நுகர்ந்தேன்.. அவளின் வாசம்...
பூவா? பெண்ணா? ... புரியவில்லை..

இதயம் ஓசை வாய்வழி சப்தமாய் வந்தது..
இது காதல் படுத்தும் பாடு..
உன் விழிக்கு திரைவைத்து மூடு..
இதயத்தால் என் உயிர் தேடு ..
முடிந்தால் அதை இப்போதே எடு ..நான் காதல் செய்கிறேன்..

பணியில் உறைந்த பறவை போல வார்த்தைகள் கொட்டிவிட்டு
பூவை பிரிந்த கொடியாய் நின்றேன்..

அகவும் மயில்போல ஆனந்தமாய் பார்த்தாள்..
காதல் ரயில் இதய தண்டவாளத்தில் இன்பமாய் நகர்ந்தது..

இடிவிழுந்த முட்டைமாதிரி செய்தியொன்று ..
மனதுக்குள் திருமணம் செய்தவனை நிராகரித்து
புதிதாய் ஒருவன் நிச்சயமானான்..

பூச்செடிக்கு நீரே போதும் .. திராவகம் எதற்கு?

முட்செடியாய் இதய கோப்பை மாறியது..
அது சோகப் பூக்களை தினமும் கொடி ஏற்றியது..

ஒருமுறை சந்தித்து சொன்னாள்..

நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று

நான்சொன்னேன்..

நினைவில் வாழ கற்றது நன்று... நீ இல்லாமல் வாழ்வது இன்று....

அவளின் ஞாபக கணுக்கள் எனை
தூக்கதிலிருந்து துண்டித்துக்கொண்டே இருந்தது...

காதலோடு க.நிலவன்....

எழுதியவர் : க.நிலவன்.. (12-Jun-15, 9:42 pm)
பார்வை : 134

மேலே