மழையழைப்புகள்-4
மழையழைப்புகள்-4
மழை வந்துவிடப்போகிறது
வா நனையத்தயாராகலம்….
இன்றைக்கு எப்படியும் பார்த்துவிடவேண்டும்
மழை விழும் குளத்தை அது சுமக்கும்
அல்லிக்கொரு துளி
தாமரைக்கொரு துளி
கத்திக்கிடக்கும்
தவளைக்கூட்டத்திற்கொரு துளியென பகிர்வதை பார்த்துக்கிடக்கலாம்…வா
தத்திரிகிட தத்திரிகிட தத்தோம்….