மறக்காத தருணங்கள்

பழகிய நாள் கிடைத்த இதம்...
பார்த்த நாள் கொண்ட ஈர்ப்பு ...
பிரிந்த பின்னும் பிரியாத பந்தம் ...
பீடமேறி நீ என்னில் நாடிய சொந்தம்...
புகலிடமாகி நான் உன்னில் தேடிய நெருக்கம்...
பூவென என்னை நீ பூசித்த நிமிடம்...
பெண்ணிவள் உன்னை நேசித்த நொடிகள்...
பேதையிவள் அறியாத தவிப்பு...
பைத்தியமாக உன்னில் நான் கொண்ட மையல்...
பொக்கிஷமென உன்னால் கிடைத்த அன்பு....
போதையென நான் கொண்ட மயக்கம்...
பௌர்ணமியாகி நீ என்னில் ஒளிர்ந்த நாட்கள்...

மரணத் தருவாயிலும், மறக்கா தருணங்களே....

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (12-Jun-15, 8:14 pm)
பார்வை : 1222

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே