காதல் சிம்மாசனம்

பட்டாம்பூச்சிக்கும்
உனக்குமுள்ள
ஆறு வித்தியாசங்களைப்
பட்டியல்
போடச் சொன்னாய்
அது சிறுசா இருக்கு
நீ பெருசா இருக்க
என்கிற
முதல் வித்தியாசத்திற்கு மேல்
தாண்ட முடியவில்லை
என்னால்

=========================

பூக்களை மித்துவிட்டதாய்ப்
பதறி உதறி
நான்
கைகாட்டிய இடத்தில்
உனது காலடிகள்

=========================

போஸான் அல்ல ..
உனது உதட்டில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
சற்று முன்னர்
நீ சுவைத்த
சாக்லெட்டின் சிறு துணுக்கே
என்னைப் பொருத்தவரை
கடவுளின் துகள்

=========================

இருகை கூப்பி
அண்ணாந்து
வானம் பார்த்து
எதற்கோ
தேங்க் காட்
என்றாய்
இருகை கூப்பி
அண்ணாந்து
வானம் பார்த்து
தேங்க் காட்
என்றார்
கடவுள் ,
கடவுளின்
கடவுளைப் பார்த்து

=========================

உன்னை நினைத்தே
படிக்காமல் போன
பரிச்சையில்
நான் வாங்கிய
முட்டைதான்
என்னைப் பொருத்தவரை
பொன் முட்டை

=========================

உன்னுடைய
ஒரு ஜோடி
செருப்புகளைத்
தருகிறாயா
எனது
காதல் சிம்மாசனத்தில்
வைக்க வேண்டும்

=========================

படைக்கும்போதே
உன்னைச் சில
ஜெராக்ஸ் காப்பிகள்
எடுத்து வைத்துக்கொண்டார்
கடவுள்
அந்த ஜெராக்ஸ்
காப்பிகளுக்கு
இந்த உலகத்தில்
தேவதைகள்
என்று பெயர்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (12-Jun-15, 7:45 pm)
Tanglish : kaadhal simmasanam
பார்வை : 384

மேலே