கல்வி

அன்றைய கல்வி முறையில் ஒழுக்கமேன்பது
பெரியோரை மதித்தல் , பிறர் மனம் புண்படாது பேசாதிருத்தல்
இன்றைய கல்வி முறையில் ஒழுக்கமேன்பது
சீருடை அணிதல் மற்றும் ஆங்கிலத்தில் பேசுதல்
அனுபவத்தில் அறிவை தந்தது அன்றைய கல்வி
மனப்பாடம் செய்ய சொல்கிறது இன்றைய கல்வி
ஆளுமை திறனை வளர்த்தது அன்றைய கல்வி
அடிமைத்தனத்தை புகுத்தியது இன்றைய கல்வி
பொறுமையையும் ,போராட்ட குணத்தையும்
கொடுத்தது அன்றைய கல்வி
பகட்டாக திரிய பழக்கியது இன்றைய கல்வி
அன்று எல்லோருக்கும் சம நிலை கல்வி
இன்று நமக்கு சாதி வாரி ஒதுக்கீடு கல்வி
இன்றைய கல்வியை நம் முன்னோர்கள் கற்றிருந்தால்
நாம் இன்று வரை சுதந்திரம் பெற்றிருக்க மாட்டோம்

எழுதியவர் : ஹ கே அஜய் (12-Jun-15, 11:21 pm)
சேர்த்தது : அஜய் ஹ கே
Tanglish : kalvi
பார்வை : 1813

மேலே