பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி -இது தான் விதியா

வணக்கம் .
பொள்ளாச்சி ஐயாவின் கதையை நாங்கள் திறனாய்வு செய்வதா .?? ம்ம்ம் கேள்விக்குறியோடு படிக்க தொடங்கினேன் ஒவ்வொரு கதையாக .ம்ம்ம் படித்து முடியும் போது முடிவு தேதி நெருங்கி இருந்தது .இருப்பினும் எழுதவே வேண்டும் மனதின் உறுதியான கட்டளையின் படி எழுதுகின்றேன் .

இது தான் விதியா.?
ம்ம்ம் உண்மையின் பிம்பமாய் ஓர் கதை .
இதை கதை என்று நழுவி செல்லமுடியாமல் கட்டிபோடுகின்றார் கதாசிரியர் பொள்ளாச்சி அபி அவர்கள் ..

பிச்சைக்காரி தான் கதையின் நாயகி என்று முடிவெடுத்து தொடர்கின்ற போது மரம் என்று ட்விஸ்ட் வைப்பது சிறப்பு .

கதைக்கு வலு சேர்ப்பது பரமசிவம் தான் .அடிக்கடி அவர் வருவதால் கதையில் உயிரோட்டம் அதிகமாகின்றது .

நான் அதிகம் வியந்து படித்தது மரத்தை பேச வைத்து பெண்ணாக சித்தரித்ததையே ..ஆம் அறிமுகமில்லாதவர் மேலும் கீழும் பார்ப்பது " வக்கிரபுத்தி கொண்டவர்கள் பிச்சகாரியையும் விட்டு வைப்பதில்லை " போன்ற யதார்த்த வார்த்தைகள் ரசிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைகின்றது .

பேசும் கதாபாத்திரங்களோடு புளியமரத்தை இணைத்து புதுவழிப்பயணம் இது
.

அதிகார வர்கத்தின் அலட்சியம்
அடக்குமுறை .என்று
எதிர்பார்த்தது போல் முடிவு இருந்தாலும் அதை அழகாக வடித்து இருப்பது அபி ஐயாவின் தனி சிறப்பு .
மரத்தால் பல விதமான பிரயோசனங்கள் நாம் பெற்றுக்கொண்ட போதும் அதன் வலி தனை உணர முற்படுவதில்லை .ஆனால் அபி ஐயா அவர்கள் அதற்கு உயிர்கொடுத்து பெண் எனும் அரிதாரம் பூசி அதை பேச வைத்து நிஜங்களை கோர்வையாக்கி கதையெனும் மாலையாய் எமக்கு சூட்டி உள்ளார்கள் .

இறுதி முடிவு மரத்தின் மட்டும் அல்ல எமக்கான அழிவும் தான் .

நன்றி வணக்கம் .


திறனாய்வு செய்யும் அளவிற்கு திறமை கொண்டவள் நான் அல்ல.என் சிறு புத்திக்கு எட்டியதை பதிவு செய்துள்ளேன்.

kayalvizhi .

எழுதியவர் : கயல்விழி (15-Jun-15, 7:44 am)
பார்வை : 136

மேலே