புரியாத மிருகநியதி
விழித்திருக்கும் நேரமெல்லாம்
அதனொடு விளையாடிக் களித்திருந்தேன்
தத்தெடுத்தப் பிள்ளைபோல்
பாசத்துடன் பேணிக் காத்துவந்தேன்
விளையாடும்அழகை படம்பிடித்து
வலைதளத்தில் போட்டு ரசித்தேன்
உண்ணும்பாங்கை ரசிப்பதற்கே
விதவிதமாய் உணவை கொடுத்துவந்தேன்
எமன் உருவில் வந்ததோ
கருவிற்றிருந்த தாய்ப் பூனை
கண் இமைக்கும் நேரத்திலே
அதன்விதி முடித்துச் சென்றதுவே
புரியாத மிருகநியதி இது
நெஞ்சினிலே விழுந்தது வடுவொன்று