கன்னியின் வேண்டுதல் --- அரவிந்த்
கண் இமைக்கும் நேரத்தில்
என் கனவினை
புரிந்து கொள்ள வேண்டும்..
கண் உறங்கும் போதிலும்
என் தலை கோதி தாலாட்டு
பாடிட வேண்டும்..
சில நேரம் என் தாயாகவும்
சில நேரம் என் தந்தையாகவும்
பல நேரம் என் தாயுமானவனாய்
நின்றிட வேண்டும்..
என்னவனின்
விரிந்த மார்பினில்
நான் படுத்துறங்கிட வேண்டும்...
அவன் அகன்ற நெற்றியில்
ஒரு முத்தம்
நான் பதித்திட வேண்டும்..
என் விழி அசைவின்
அர்த்தம் அவன்
அறிந்திட வேண்டும்..
நீண்ட கால்களில்
என் தலையை சாய்த்து
தாலாட்டு பாடிட வேண்டும்..
இரவுகளில்
நக கீறல்களை
தாங்கிட வேண்டும்..
நான் எழுப்பும்
கலவி ஓசைகளை
என்னவன் ரசித்திட வேண்டும்..
இரவு கலவி முடிந்தும்
முடியாத
காதல் வேண்டும்..
ஊடல் வேண்டும் மோதல் வேண்டும்
சமாதானம் ஆகிட
இறுக்கி என்னை அணைத்திட வேண்டும்..
கண்ணனை போல
என்னவன் பெண்கள் சூழ
இருந்திட வேண்டும்..
அப்படி இருக்கையிலும்
இந்த சீதைக்கு மட்டும்
ராமனாய் இருந்திட வேண்டும்..
நல்லதோர் எண்ணம் கொண்டிட வேண்டும்
நாளும் என்னை பற்றி மட்டுமே
நினைத்திட வேண்டும்..
உடல் இரண்டு
உயிர் ஒன்றாய்
வாழ்ந்திட வேண்டும்..
பிறந்த வீடு புகுந்த வீடு என்று
பிரிவினை இல்லாமல்
பார்த்திட வேண்டும்..
என் கார்மேக கண்ணனே
உனக்கு மாலையிட்டு பூஜிக்கும்
மங்கையின் வேண்டுதல் நிறைவேற்றுவாயோ...!